Published:Updated:

`போலீஸ்காரருக்குத் திருமணம் பேசி முடிக்கப்பட்ட பெண்; மதபோதகருடன் பாலியல் வழக்கில் கைதான பின்னணி!'

பாலியல் தொழில் நடந்ததாகக் கூறப்படும் சர்ச்
பாலியல் தொழில் நடந்ததாகக் கூறப்படும் சர்ச்

கேரளாவிலிருந்தும் இளம்பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 19 வயது பெண்ணின் தாயார் முன்பு காவல் நிலையத்தில் துப்புரவு வேலை செய்திருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டம், எஸ்.டி.மங்காடு பகுதியைச் சேர்ந்தவர் லால் ஷைன் சிங் (40). இவர் மத போதகராக இருக்கிறார். இவர் எஸ்.டி.மங்காடு பகுதியிலுள்ள தனது வீட்டில் 'ஃபெடரல் சர்ச் ஆஃப் இந்தியா' என்ற பெயரில் சர்ச் நடத்திவருகிறார். அவரது வீட்டுக்கு இளம்பெண்களும், பல ஆண்களும் கார்களில் அடிக்கடி சென்று வந்துள்ளனர். ஆரம்பத்தில் அவர்கள் மத வழிபாட்டுக்காகச் செல்வதாக அந்தப் பகுதி மக்கள் நினைத்தனர். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் சந்தேகப்படும்படியாக இருந்திருக்கின்றன. இதனால் அந்தப் பகுதி மக்கள் இது குறித்து போலீஸாருக்கு ரகசியமாகத் தகவல் கொடுத்தனர். போலீஸார் அந்த வீட்டை திடீரென சோதனை செய்தபோது அங்கு கேரளாவைச் சேர்ந்த பெண் உட்பட சில பெண்களும் ஆண்களும் அங்கு இருந்திருக்கிறார்கள். போலீஸார் விசாரிக்கத் தொடங்கினர். அவர்களில் 19 வயது இளம் பெண்ணுடன் அவரது தாயும் இருந்திருக்கிறார். போலீஸ் விசாரணையில் அவரது தாய் அந்தப் பெண்ணை பாலியல் தொழிலுக்குத் தள்ளியது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

இதையடுத்து மத போதகர் லால் ஷைன் சிங், களியக்காவிளை அருகே பனங்காலைப் பகுதியைச் சேர்ந்த ஷைன் (34), மேக்காடு பகுதியைச் சேர்ந்த ஷிபின் (34), ஞாறான்விளை பகுதியைச் சேர்ந்த 55 வயது பெண், குறுமத்தூர் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் மற்றும் இரண்டு இளம்பெண்களை நித்திரவிளை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மேலும், அவர்களின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டை சர்ச்சாக மாற்றி அங்கு மத போதகத்துக்கு வருவதுபோல் இளம் பெண்களை அழைத்துச் சென்று பாலியல் தொழில் நடத்திவந்தது விசாரணையில் தெரியவந்தது.

நித்திரவிளை போலீஸார் மத போதகர் லால் ஷைன் சிங், இரண்டு இளம் வயது பெண்கள் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், "லால் ஷைன் சிங்குக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். வீட்டை சர்ச்சாக மாற்றிய அவர், அடிக்கடி பிரார்த்தனை கூட்டங்களை நடத்தியிருக்கிறார். வீட்டில் மனைவி, குழந்தைகள் இல்லாத சமயத்தில் பெண்களைவைத்து பாலியல் தொழில் செய்துவந்திருக்கிறார்.

பாலியல் தொழில் நடந்ததாக கூறப்படும் சர்ச்
பாலியல் தொழில் நடந்ததாக கூறப்படும் சர்ச்

கேரளாவிலிருந்தும் இளம் பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 19 வயது பெண்ணின் தாயார் முன்பு காவல் நிலையத்தில் துப்புரவு வேலை செய்திருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு போலீஸ்காரர் ஒருவரை திருமணம் பேசி முடித்திருக்கிறார்கள். விரைவில் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் அந்தப் பெண் தாயின் தவறான வழிகாட்டுதலால் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு