Published:Updated:

திருவள்ளூர்: பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமி- பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவர் சிக்கியது எப்படி?

கைது

பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்ததையடுத்து அவரின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் டாக்டர்களுக்கு ஏற்பட்டது.

திருவள்ளூர்: பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமி- பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவர் சிக்கியது எப்படி?

பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்ததையடுத்து அவரின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் டாக்டர்களுக்கு ஏற்பட்டது.

Published:Updated:
கைது

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு அம்மா, அப்பா இல்லை. அதனால் தன்னுடைய தாத்தா, அத்தை ஆகியோரின் ஆதரவில் அந்தச் சிறுமி வசித்துவந்தாள். சிறுமியின் தாத்தா, சோழவரம் பகுதியிலுள்ள செங்கல் சூளை ஒன்றில் வேலை பார்த்துவருகிறார். இந்தச் சூழலில் சிறுமியைச் சில தினங்களுக்கு முன்பு பாம்பு கடித்தது. அதனால் அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது சிறுமியின் பிறப்புறுப்பில் காயங்கள் இருப்பது தெரியவந்ததும்... ஏற்கெனவே சிறுமி பாலியல் தொல்லைக்குள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

முதியவர் பாலு
முதியவர் பாலு

சிறுமி உயிரிழந்த சோகத்தில் அவரின் தாத்தாவும், அத்தையும் இருந்தனர். அப்போது சிறுமியின் தாத்தாவிடம் ஒரு வீடியோ ஒன்றை ஒருவர் காண்பித்தார். அதில் சிறுமியை முதியவர் பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சி பதிவாகியிருந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாத்தா, தன்னுடைய மகளிடம் விவரத்தைக் கூறினார். இதையடுத்து சிறுமியின் அத்தை, அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி, வீடியோ பதிவு தொடர்பாக விசாரித்தார். முதற்கட்டமாக அந்த வீடியோவை யாரெல்லாம் பகிர்ந்தார்கள் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் பத்துக்கும் மேற்பட்டவர்களின் விவரம் போலீஸாருக்குக் கிடைத்தது. அதில் சிலரைப் பிடித்து விசாரித்தபோது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தகவல் உறுதியானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்தது சிறுமியின் தாத்தா வேலை பார்க்கும் செங்கல் சூளையில் பணியாற்றும் பாலு (75) என்று தெரியவந்தது. இதையடுத்து முதியவர் பாலுவை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவர்தான் இந்த வீடியோவைத் தனக்கு தெரிந்த விஜயகுமார், சதீஷ், பாஸ்கர், ரமேஷ் ஆகியோருக்கு அனுப்பினார் என்பதும் தெரியவந்தது. அவர்கள் தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் சிறுமியின் வீடியோவை அனுப்பியிருக்கின்றனர். இதையடுத்து சிறுமியின் வீடியோவைப் பகிர்ந்த மூன்று பேர்மீது போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுத்தனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
சித்திரிப்புப் படம்

இந்த வழக்கு தொடர்பாக அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த தகவல் தெரிய வந்த பிறகு சிறுமியின் வீடியோவை இவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். ஏற்கெனவே சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் வாய்மொழியாகத் தெரிவித்திருந்தனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வீடியோ வெளியானது. இதையடுத்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாலுவையும், வீடியோவைப் பகிர்ந்த குற்றச்சாட்டில் சில இளைஞர்களையும் கைதுசெய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம். இந்த வழக்கில் இன்னும் சிலரைக் கைதுசெய்ய வேண்டியிருக்கிறது. மேலும் கைதான பாலுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். ஏனெனில் சிறுமியின் வீடியோவை எடுத்தது யார் என்ற கேள்விக்கு பாலு தெளிவாக பதிலளிக்கவில்லை" என்றனர்.