Published:Updated:

மனைவியைத் தவறாகப் பேசியதை தட்டிக்கேட்ட கணவர் கொலை! - திருப்பூரில் பயங்கரம்

கொலை

வீட்டுக்கு அருகே உள்ளவர்களிடம் தன் மனைவி குறித்துத் தவறாகப் பேசியது குறித்துக் கேட்ட கணவர், தொழிலாளி ஒருவரால் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம், திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (33). இவர் மனைவி ராணி. இந்தத் தம்பதியர் குழந்தைகளுடன் திருப்பூர், மாஸ்கோ நகர் 3-வது வீதியில் தங்கியிருந்து கட்டட வேலைக்குச் சென்றுவந்தனர். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கட்டடத் தொழிலாளி அண்ணாமலை (40). இவர், பிரவீன் மனைவி ராணி குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தவறாகப் பேசிவந்ததாகச் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக பிரவீனுக்கும் அண்ணாமலைக்கும் ஏற்கெனவே பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மீண்டும் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அப்போது, வீட்டில் காய்கறி வெட்டும் கத்தியால், அண்ணாமலை குத்தியதில் பலத்த காயமடைந்த பிரவீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

கைது
கைது

இதையடுத்து, தப்பிச் சென்ற அண்ணாமலையை ஊத்துக்குளி அருகே போலீஸார் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.