Published:Updated:

கிருஷ்ணகிரி; அவரைச் செடிகளுக்கு மத்தியில் கஞ்சா சாகுபடி; விவசாயியைக் கைதுசெய்த போலீஸ்!

கஞ்சா
News
கஞ்சா ( கோப்புப் படம் )

``அவரைச் செடிகளுக்கு மத்தியில் கஞ்சா வளர்த்தவரை, கையும் களவுமாகப் பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்கிறோம்.'' – போலீஸார்

Published:Updated:

கிருஷ்ணகிரி; அவரைச் செடிகளுக்கு மத்தியில் கஞ்சா சாகுபடி; விவசாயியைக் கைதுசெய்த போலீஸ்!

``அவரைச் செடிகளுக்கு மத்தியில் கஞ்சா வளர்த்தவரை, கையும் களவுமாகப் பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்கிறோம்.'' – போலீஸார்

கஞ்சா
News
கஞ்சா ( கோப்புப் படம் )

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியைச் சுற்றி வனப்பகுதி இருக்கிறது. அஞ்செட்டியிலிருந்து, 25 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் நூருந்துசாமி மலைப்பகுதியில், விவசாயிகள் சிலர் விளைநிலத்தில் கஞ்சா சாகுபடி செய்திருப்பதாக, உளவுத்துறை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அஞ்செட்டி எஸ்.ஐ அண்ணாமலை தலைமையிலான போலீஸார் நேற்று மாலை, குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று ஆய்வுசெய்தனர். இதில், பாண்டு என்பவரின் மகன் மது (34), தன்னுடைய விளைநிலத்தில் சிறு பகுதியில் அவரைச் செடிகளுக்கு மத்தியில் கஞ்சா சாகுபடி செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் விவசாயி மதுவைக் கைதுசெய்து, ஆறு கிலோ அளவுக்கான கஞ்சா செடிகளை அழித்தனர்.

மது
மது

இது குறித்து எஸ்.ஐ அண்ணாமலையிடம் பேசினோம். ‘‘சமவெளியிலிருந்து உயரமான, செல்வதற்குச் சிரமமாக இருக்கும், நூருந்துசாமி மலைப்பகுதியில், விளைநிலம் வைத்திருக்கும் விவசாயிகள் சிலர், கஞ்சா பயிரிட்டு கர்நாடகாவுக்குக் கடத்திவருகின்றனர். நாங்கள் விவசாயி மதுவைப் பிடித்ததும் அவர், ‘கஞ்சா செடியெல்லாம் நான் வெக்கலீங்க, என் மாமனார்தான் வளர்க்குறாரு’ என, கண் தெரியாத தன் மாமனார் மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்த்தார். அவரைச் செடிகளுக்கு மத்தியில் கஞ்சா வளர்த்த அவரை, கையும் களவுமாகப் பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்கிறோம். கஞ்சா சாகுபடியைத் தடுக்க தொடர்ந்து ரெய்டு செல்கிறோம்'' என்றார்.