Published:Updated:

வீட்டு வேலைக்குச் சென்ற சிறுமி பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட கொடூரம்! - 7 பேருக்கு குண்டாஸ்

கைது

வீட்டு வேலைக்குச் சென்ற சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைதுசெய்தனர்.

வீட்டு வேலைக்குச் சென்ற சிறுமி பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட கொடூரம்! - 7 பேருக்கு குண்டாஸ்

வீட்டு வேலைக்குச் சென்ற சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைதுசெய்தனர்.

Published:Updated:
கைது

அரியலூரில் 16 வயது சிறுமியை ஏமாற்றி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் ஏழு பேரை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைதுசெய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த சாந்தா என்பவர், வீட்டு வேலைக்குக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அழைத்துச் சென்றிருக்கிறார். சாந்தா அந்தச் சிறுமியை கீழப்பழுவூரைச் சேர்ந்த சந்திரா என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பெற்றோரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து சிறுமியை அவர் பெற்றோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஐந்து மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர்.

கைதான இந்திரா
கைதான இந்திரா

அதன்பேரில் காவல்துறை ஆய்வாளர் சுமதி வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார். அதில், சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்ற சாந்தா அவரை கீழப்பாவூரைச் சேர்ந்த சந்திரா என்ற பெண்ணிடம் ஒப்படைத்தது தெரியவந்தது. அந்த சிறுமிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்ற வழக்கில் 11 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகளான சாந்தா, சந்திரா, இந்திரா, பிரேம், தெய்வீகன், வெற்றி கண்ணன், குமார், மனோஜ் உள்ளிட்ட ஏழு பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்ய மாவட்ட எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார்.

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை

அதன்பேரில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடைய ஏழு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்ய உத்தரவு பிறப்பித்தார். ஏற்கெனவே, இந்த வழக்கு தொடர்பாக நான்கு பேர் குண்டர் சட்டத்தில் அண்மையில் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism