Published:Updated:

சென்னையில் சொகுசு காரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்; சேலத்தில் மீட்ட போலீஸார்! - என்ன நடந்தது?

கடத்தல் ( representational image )

ரியல் எஸ்டேட் அதிபரை சொகுசு காரில் கடத்திய கும்பலை சேலத்தில் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தலுக்குப் பின்னணியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையில் சொகுசு காரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்; சேலத்தில் மீட்ட போலீஸார்! - என்ன நடந்தது?

ரியல் எஸ்டேட் அதிபரை சொகுசு காரில் கடத்திய கும்பலை சேலத்தில் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தலுக்குப் பின்னணியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Published:Updated:
கடத்தல் ( representational image )

சென்னை மதுரவாயல், ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர், 30.5.2022-ம் தேதி மாங்காடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ``நான் கடந்த நான்கு ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் மற்றும் செல்போன் டவர் அமைத்துக் கொடுக்கும் கம்பெனியை நடத்திவருகிறேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாங்காடு கோவூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரை எனக்குத் தெரியும். சுரேஷ்குமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இந்த நிலையில் சுரேஷ்குமார், கேட்டுக்கொண்டதால் அவருக்குச் சொந்தமான கோவூர், ராயல் நகரிலுள்ள வீட்டை விற்பதற்காக ஓ.எல்.எக்ஸ் இணையதளம் மூலம் விளம்பரம் செய்தேன்.

சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா

விளம்பரத்தைப் பார்த்து ரவிராஜன் என்ற நபர் என்னைத் தொடர்புகொண்டு வீட்டைப் பார்க்க அனுமதி கேட்டார். அதன்படி கடந்த 27.5.2022-ம் தேதி ரவிராஜன், அவரின் குடும்பத்தினர் எனக் கூறிகொண்டு மூன்று பேரை அழைத்துக்கொண்டு பி.எம்.டபுள்யூ காரில் வந்தார். பின்னர் அவர்கள் வீட்டைப் பார்த்துவிட்டு வீடு பிடித்துவிட்டதாகவும், வரும் 30-ம் தேதி அமாவாசை தினத்தன்று முன்பணம் தருவதாகவும் கூறிவிட்டு சென்றனர். அதன்படி 30-ம் தேதி மதியம் 1:45 மணியளவில் ரவிராஜனும் அவரின் குடும்பத்தினரும் காரில் வந்தனர். அப்போது வீட்டின் உரிமையாளர் சுரேஷ்குமாரிடம் ரவிராஜன் தரப்பு விலையை நிர்ணயம் செய்து பத்திர நகல்களைக் கேட்டது. அப்போது திடீரென நான்கு பேர் உள்ளே வந்து சுரேஷ்குமாரின் கழுத்தில் கத்தியைவைத்து அவரின் கை, வாயைத் துணியால் கட்டி, இழுத்துச் சென்று வீட்டின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரில் கடத்திச் சென்றுவிட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுரேஷ்குமாருக்கும் அவரின் உறவினர் முத்துசாமி, பாபு ஆறுமுகம் ஆகியோருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள்தான் சுரேஷ்குமாரை காரில் கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கிறேன். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் மாங்காடு போலீஸார் வழக்கு பதிவுசெய்து ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ்குமாரைத் தேடிவந்தனர். செல்போன் சிக்னல், சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் சுரேஷ்குமாரைக் கடத்திய கும்பல் சேலத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார் சுரேஷ்குமாரை மீட்டதோடு, கடத்தலில் ஈடுபட்டவர்களையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கைது
கைது

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ்குமார், தன்னுடைய வீட்டை இரண்டு கோடி ரூபாய்க்கு விற்க திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இந்த நிலையில் சுரேஷ்குமாரின் உறவினருக்கும், அவரைக் கடத்திய கும்பலுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துவந்துள்ளது. இந்தச் சமயத்தில் சுரேஷ்குமார் வீட்டை விற்பது தொடர்பான தகவலை விளம்பரம் மூலம் தெரிந்துகொண்ட கடத்தல் கும்பல், வீட்டை வாங்குவதுபோல ரவிராஜன் என்பவரை ஏற்பாடு செய்திருக்கின்றனர். ரவிராஜன் வெளிநாட்டில் வேலைபார்த்தவர். தற்போது சென்னை பூந்தமல்லி பகுதியில் குடியிருந்துவருகிறார். ரவிராஜன் மூலம் சுரேஷ்குமாரின் வீட்டை வாங்குவதுபோல நடித்து அவரை இந்தக் கும்பல் கடத்திச் சென்றிருக்கிறது. சிசிடிவி-யில் பதிவான காரின் பதிவு நம்பர், செல்போன் சிக்னல் ஆகியவற்றின் அடிப்படையில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ்குமாரை மீட்டுவிட்டோம். அவர் கடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism