Published:Updated:

வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை... இளம்பெண்களைப் பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல் கைது!

பாலியல் தொழில் ( சித்திரிப்புப் படம் )

இளம்பெண்களை அழைத்து வந்து, திருப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது.

வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை... இளம்பெண்களைப் பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல் கைது!

இளம்பெண்களை அழைத்து வந்து, திருப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது.

Published:Updated:
பாலியல் தொழில் ( சித்திரிப்புப் படம் )

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியை அடுத்த அணைப்புதூர் பகுதியிலுள்ள வீட்டில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில் அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, கேரளத்தைச் சேர்ந்த இடைத்தரகர்களான ஜித்தன் (20), ஸ்ரீஜித் (21), ஸ்ரீஜேஸ் (26) ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். மேலும் அவர்களின் செல்போன்களை ஆய்வுசெய்ததில் மும்பை, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல பெண்களின் புகைப்படங்கள் இருந்ததும், அவற்றை ஆன்லைனில் பதிவேற்றம் செய்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

கைது
கைது
சித்திரிப்புப் படம்

இந்த நிலையில், போலீஸார் இது குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாகப் பேசும் போலீஸார், ``கோவை, திருப்பூர், ஈரோடு தொழிலதிபர்கள் நிறைந்த மாவட்டம் என்பதால், அவர்களையும், இளைஞர்களையும் குறிவைத்து பாலியல் தொழில் நடத்திவந்திருக்கின்றனர். இதற்கென கேரளா, மும்பை, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து விமானம் மூலம் பெண்கள் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த மாநிலங்களிலிருந்து இளம்பெண்களை அழைத்து வந்து, திருப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது'' எனத் தெரிவிக்கின்றனர்.