Published:Updated:

`இரிடியமான பித்தளை அண்டா... தோப்புக்குள் பூஜை செய்த கும்பல்!' - வளைத்துப் பிடித்த போலீஸ்

போலி இரிடியம் விற்க முயன்றவர்கள்

தஞ்சாவூரில் பித்தளை அண்டாவை இரிடியம் எனக் கூறி ஏமாற்றி விற்க முயன்ற கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

`இரிடியமான பித்தளை அண்டா... தோப்புக்குள் பூஜை செய்த கும்பல்!' - வளைத்துப் பிடித்த போலீஸ்

தஞ்சாவூரில் பித்தளை அண்டாவை இரிடியம் எனக் கூறி ஏமாற்றி விற்க முயன்ற கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

Published:Updated:
போலி இரிடியம் விற்க முயன்றவர்கள்

தஞ்சாவூர் சூரக்கோட்டை பிரிவு சாலையிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோப்பு ஒன்றுக்குள் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஐந்து பேர் கொண்ட கும்பல் நிற்பதாக எஸ்.பி அலுவலகத்திற்கு தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து எஸ்.பி தனிப்படை போலீஸார் அந்த இடத்திற்கு விரைந்தனர். அப்போது வட்டமான பெரிய பொருளை நடுவில் வைத்து அதற்கு சந்தனம், குங்கும் ,பூ வைத்து `ஓ காளி... மகா காளி!' என அந்த கும்பல் பூஜை செய்து கொண்டிருந்துள்ளனர்.

போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள்
போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள்

இதனை பார்த்த தனிப்படை போலீஸார் அந்த கும்பலை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள், ``பித்தளைப் பொருளை இரிடியம் எனக் கூறி போலியாக விற்பனை செய்ய வந்தோம். இரிடியத்தை வாங்குவதற்கு ஆள்கள் கிடைக்கவில்லை... அத்துடன் எங்களுக்கு கை செலவிற்கு பணம் இல்லை, அதனால் கொள்ளையடிக்க திட்டமிட்டோம்" என்று கூறியிருக்கின்றனர். போலி இரிடியத்தை விற்கவும், கொள்ளையடிக்கவும் பூஜை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனை தொடர்ந்து தனிப்படை போலீஸார் ஐந்து பேர் கொண்ட கும்பலை கைது செய்து தஞ்சாவூர் தாலுகா காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன், முனீஸ்வரர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முனீஸ்வரன், கண்ணன், சின்னமுத்து ஆகிய அந்த ஐந்து இளைஞர்களிடமும் தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம். ``சந்தேகத்திற்கு இடமான கும்பல் நிற்பதாக தகவல் கிடைத்த அடுத்த கணமே அங்கு சென்றோம். அந்த கும்பல் பெரிய பொருளை வைத்து பூஜை செய்து கொண்டிருந்தது. அந்த பொருளுக்குள் திரி போன்று ஏதோ வெளியே நீட்டி கொண்டிருந்தது. பார்ப்பதற்கு வெடிகொண்டை போலவே இருந்ததால், ஒருவித அச்சத்துடனேயே அருகில் சென்று அவர்களைப் பிடித்து விசாரித்தோம்.

போலி இரிடியம் விற்க முயன்ற கும்பலை கைது செய்த போலீஸ்
போலி இரிடியம் விற்க முயன்ற கும்பலை கைது செய்த போலீஸ்

`பண வசதி படைத்த பெரிய நபர்களை ஏமாற்றி பித்தளை அண்டாவான அந்தப் பொருளை இரிடியம் எனக் கூறி விற்பனை செய்வதற்காக வந்தோம். வாங்குவதற்காக ஆள்கள் கிடைக்காததால் எங்களுக்கு சாப்பிடுவதற்கும், தங்குவதற்கும் பணம் இல்லை... அதனால் வழிப்பறியில் ஈடுபடவும் திட்ட மிட்டிருந்தோம். அதற்குள் கைது செய்து விட்டீர்கள்' எனத் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து பித்தளை அண்டா, அருவா, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தோம். மேலும், அந்த இளைஞர்களுடன் வேறு யாருக்கும் தொடர்பிருக்கிறதா என்றும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism