Published:Updated:

தாம்பரம்: சீல் உடைக்காமல் கன்டெய்னரில் நூதன கொள்ளை! - கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

கொள்ளை குறித்து விவரிக்கும் கமிஷனர் அமல்ராஜ்

கன்டெய்னரில் வைக்கப்பட்டிருக்கும் சீலை உடைக்காமல் நூதன முறையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை தாம்பரம் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

தாம்பரம்: சீல் உடைக்காமல் கன்டெய்னரில் நூதன கொள்ளை! - கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

கன்டெய்னரில் வைக்கப்பட்டிருக்கும் சீலை உடைக்காமல் நூதன முறையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை தாம்பரம் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

Published:Updated:
கொள்ளை குறித்து விவரிக்கும் கமிஷனர் அமல்ராஜ்

சென்னை, தாம்பரம் சானட்டோரியத்தில் MEPZ-ல் உள்ள ஃபார்மா செல் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்படுகிறது. இங்கிருந்து 24 டன் எடையுள்ள 576 கெமிக்கல் பேரல்கள் ஜெர்மனுக்கு அனுப்ப கடந்த 18-ம் தேதி இரண்டு கன்டெய்னர் லாரிகள் மூலம் சென்னை துறைமுகத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. பின்னர் கடந்த 20-ம் தேதி லாரியில் வந்த பொருள்களை கம்பெனியின் அதிகாரிகளுடன் துணையோடு சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சுமார் 9 டன் கெமிக்கல் பேரல்கள் காணாமல் போன தகவல் தெரியவந்தது. இதையடுத்து நிறுவனத்தின் மேலாளர் சதீஷ் என்பவர் தாம்பரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்

மேலும் கன்டெய்னர் கொள்ளை தொடர்பாக விசாரிக்க தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் கொள்ளை குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கெமிக்கல் பேரல்களைக் கொண்டு சென்ற கன்டெய்னர்களில் சீல் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் சீல் உடைக்கப்படாமல் கன்டெய்னரிலிருந்த பேரல்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அதனால் எங்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து எங்களின் சந்தேகப் பார்வை சம்பந்தப்பட்ட கன்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்ற வட சென்னையைச் சேர்ந்த சங்கர்மீது விழுந்தது. அவரிடம் விசாரித்தபோதுதான் இந்த நூதன கொள்ளை குறித்த தகவல்கள் தெரியவந்தன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கன்டெய்னரின் சீலை உடைக்காமல் அதைச் சுற்றியுள்ள போல்ட்களை மட்டும் கட்டிங் இயந்திரம் மூலம் உடைத்து இந்தக் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. மேலும் கன்டெய்னரைத் திறந்து கொள்ளை சம்பவமே தெரியாதளவுக்கு குறிப்பிட்ட பேரல்களை மட்டுமே இந்தக் கும்பல் கொள்ளையடித்துள்ளது. அதன்பிறகு மீண்டும் வெல்டிங் இயந்திரம் மூலம் சீலை அதே பகுதியில் வைத்துவிட்டு புதிய போல்ட்களைப் போட்டு அதில் பெயின்ட்டையும் அடித்துள்ளனர். அதனால் கன்டெய்னர் உடைக்கப்பட்டதற்கான எந்தவித அறிகுறியும் தெரியவில்லை. இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கு டிரைவரும் உடந்தையாக இருந்துள்ளார். தாம்பரத்திலிருந்து அனுப்பப்பட்ட பேரல்களை சென்னை துறைமுகத்தில் கணக்குப்பார்த்தபோது கொள்ளைச் சம்பவம் வெளியில் தெரிந்துவிட்டது. இல்லையென்றால் இந்தக் கொள்ளை எங்கு நடந்தது என்ற விவரமும் தெரிந்திருக்காது. இதுதான் கொள்ளையர்களின் மாஸ்டர் பிளான் என்பதை விசாரணை மூலம் கண்டறிந்தோம். மேலும் இந்தக் கொள்ளைக்கு மாஸ்டர் மைன்டாக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாறன் என்கிற இளமாறன் செயல்பட்டது தெரியவந்தது. அவருக்கு உதவியாக கன்டெய்னரில் வைக்கப்படும் சீலை உடைக்காமல் அதன் போல்ட்டை கட்டிங் செய்து வெல்டிங் வைப்பதில் கில்லாடியான கார்த்திக் என்பவர் செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைதுசெய்தோம்.

கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர் சிபிசக்ரவர்த்தி
கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர் சிபிசக்ரவர்த்தி

இதற்காக சென்னை துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு கன்டெய்னர் மூலம் ஏற்றுமதி செய்யும் பொருள்கள் குறித்த விவரங்களை டிரைவர்கள் மூலம் இளமாறன் தெரிந்துக் கொள்வார். பின்னர் கன்டெய்னர் லாரியை ஓட்டும் டிரைவர்களிடம் டீல் பேசுவார். டிரைவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கொடுப்பதாக ஆசைவார்த்தைகளைக் கூறுவார். அதற்கு சம்மதிக்கும் டிரைவர்களின் உதவியோடு இந்த நூதன கொள்ளை நடந்து வந்துள்ளது. கைதானவர்களிடம் விசாரித்தபோது தாம்பரம் கொள்ளையைத் தவிர இன்னும் சில கன்டெய்னர் கொள்ளைகளில் இந்தக் கும்பல் ஈடுபட்டுள்ளது.

ஆம்பூரிலிருந்து கன்டெய்னரில் கொண்டுவரப்பட்ட 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3,000 ஜோடி ஷு-க்களையும் திருப்போரூரில் இருந்து கொண்டுவரப்பட்ட 50 லட்சம் மதிப்புள்ள கீ போர்டுகளையும் இந்தக் கும்பல் இதே ஸ்டைலில் கொள்ளையடித்துள்ளது. இந்தக் கொள்ளையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (27) திருவெற்றியூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(38) தண்டையார்பேட்டை சேர்ந்த முனியாண்டி ஆகியோரையும் கைதுசெய்துள்ளோம். இந்தக் கும்பலிடமிருந்து 2 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.

கார்த்திக்
கார்த்திக்

இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து கமிஷனர் அமல்ராஜ் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், ``வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கன்டெய்னர்களைக் குறி வைத்து இந்தக் கும்பல் நூதன முறையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது. இந்தக் கும்பல் குறித்து இதுவரை யாருக்கும் தகவல் தெரியாது. மேலும் கொள்ளைபோன சம்பவங்களும் மாதங்கள் கடந்த பிறகே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரியவரும். அதனால் இந்தக் கொள்ளைக் கும்பல் அதை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி தொடர்ந்து கைவரிசையைக் காட்டி வந்துள்ளது. எனவே விலை உயர்ந்த பொருள்களை அனுப்பும் நிறுவனங்கள், லாரி டிரைவரின் நம்பகத்தன்மையை முதலில் உறுதி செய்ய வேண்டும். மேலும் சரக்கு வாகனத்தில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி கண்காணிக்க வேண்டும். அதோடு நிறுவனத்தின் சார்பில் கூடுதலாக பாதுகாப்பு காவலரை நியமித்தால் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்களை தவிர்க்க முடியும்" என்றார்.