Published:Updated:

வாடகைக்கு வீடு எடுத்து கள்ளநோட்டு அடித்த கும்பல்... போலீஸில் சிக்கியது எப்படி?!

கள்ளநோட்டு அடித்த கும்பல்

சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து கள்ளநோட்டு அடித்த கும்பலைக் காவல்துறையினர் கைதுசெய்திருக்கிறார்கள்.

வாடகைக்கு வீடு எடுத்து கள்ளநோட்டு அடித்த கும்பல்... போலீஸில் சிக்கியது எப்படி?!

சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து கள்ளநோட்டு அடித்த கும்பலைக் காவல்துறையினர் கைதுசெய்திருக்கிறார்கள்.

Published:Updated:
கள்ளநோட்டு அடித்த கும்பல்

கள்ளநோட்டு கும்பல்:

சென்னை மணலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளநோட்டுப் புழக்கம் அதிகரித்துவருவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில்விடும் கும்பல் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில்தான், மணலி பகுதியில் ஒரு வீட்டில் சந்தேகத்துக்குரிய ஆட்கள் நடமாட்டம் இருப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, அந்த வீட்டுக்கு விரைந்த காவல்துறையினர், துப்பாக்கிமுனையில் அங்கிருந்த ஆறு பேரை மடக்கிப் பிடித்தனர்.

கைதுசெய்யப்பட்ட கள்ளநோட்டு கும்பல்
கைதுசெய்யப்பட்ட கள்ளநோட்டு கும்பல்

அந்த வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு கட்டுக் கட்டாக 200 ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுவைத்திருந்தது தெரியவந்தது. இவர்கள் உயர்தர கலர் ஜெராக்ஸ் இயந்திரங்கள் மூலம் 100, 200 ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சடித்துவந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். இந்தக் கும்பலிடமிருந்து எட்டு லட்சம் மதிப்பிலான 200 ரூபாய் கள்ள நோட்டுகளையும், மூன்று கலர் ஜெராக்ஸ் இயந்திரங்களையும், ஒரு காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிக்கிய கும்பல்:

காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு அவர்களிடம் நடத்திய விசாரணையில், முபாரக், ரசூல் கான், யுவராஜ், பிரபாகரன், இம்தியாஸ், ஜான் ஜோசப் ஆகியோர் இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில், இந்த ஆறு பேரும் நண்பர்கள் என்றும், வேலை இல்லாத காரணத்தால் ஆடம்பரமாக வாழ, கள்ளநோட்டு அச்சடிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளார். அதற்காக, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கள்ளநோட்டு
கைப்பற்றப்பட்ட கள்ளநோட்டு

இவர்களுக்குள் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பொதுமக்கள் சந்தேகமடைந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் இந்தக் கும்பல் சிக்கியிருக்கிறது. இவர்கள் கடந்த ஆறு மாதகாலமாக எவ்வளவு கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில்விட்டிருக்கிறார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism