Published:Updated:

ரூ.1,500-க்கு டாக்டர் கையெழுத்து; இ-சேவை மையத்தில் நூதன மோசடி - பட்டதாரிப் பெண் சிக்கியது எப்படி?!

மோசடி வழக்கில் கைதான சசிகலா

இ-சேவை மையத்தில் அரசு மருத்துவரின் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட பட்டதாரிப் பெண்ணை போலீஸார் கைதுசெய்தனர்.

ரூ.1,500-க்கு டாக்டர் கையெழுத்து; இ-சேவை மையத்தில் நூதன மோசடி - பட்டதாரிப் பெண் சிக்கியது எப்படி?!

இ-சேவை மையத்தில் அரசு மருத்துவரின் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட பட்டதாரிப் பெண்ணை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
மோசடி வழக்கில் கைதான சசிகலா

சென்னை தாம்பரம் பகுதியில், இ சேவை மையம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த மையத்தில் போலி ஆவணங்களின் மூலம் நூதன முறையில் மோசடி நடப்பதாக அரசு மருத்துவர் காமேஷ் என்பவருக்குத் தெரியவந்தது. உடனடியாக அவர், இந்த மோசடியில் ஈடுபடுபவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டமிட்டார். இதற்காக தன்னுடைய நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட இ-சேவை மையத்துக்குச் சென்றார். அப்போது இ-சேவை மையத்தில் பணியாற்றிய பெண்ணிடம், ஆதார் கார்டில் பிறந்த தேதியை மாற்ற வேண்டும் என்று டாக்டர் காமேஷின் நண்பர் தெரிவித்தார்.

மோசடி வழக்கில் கைதான சசிகலா
மோசடி வழக்கில் கைதான சசிகலா

அதற்கு, ``1,500 ரூபாய் கொடுத்தால் உடனடியாக மாற்றித் தருகிறேன்" என்று அங்கிருந்த பெண் தெரிவித்திருக்கிறார். எதற்காக 1,500 ரூபாய் கட்டணம் என்று டாக்டரின் நண்பர் கேட்டபோது, `ஆதார் கார்டில் பிறந்த தேதியை மாற்ற வேண்டும் என்றால் அரசு மருத்துவரின் கையெழுத்து வேண்டும்' என்று அந்தப் பெண் கூறியிருக்கிறார். உடனே டாக்டரின் நண்பர், `எந்த டாக்டரிடம் கையெழுத்து வாங்குவீர்கள்?' என்று விசாரித்திருக்கிறார். அப்போது, அரசு மருத்துவர் காமேஷ் என்பவரின் முத்திரை, கையெழுத்தைப் போட்டு ஆதார் கார்டில் பிறந்த தேதியை மாற்றுவதாக அந்தப் பெண் தெரிவித்தார். அதைக் கேட்டு டாக்டர் காமேஷும் அவரின் நண்பரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து டாக்டர் காமேஷ், தாம்பரம் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட இ-சேவை மையம் குறித்துப் புகாரளித்தார். அந்தப் புகாரில், ``நான் தாம்பரம் அரசு மருத்துவமனையில் முதன்மை குடிமை மருத்துவராகப் பணியாற்றிவருகிறேன். கடந்த 14.12.2022-ம் தேதி நான் பணியிலிருந்தபோது என்னுடைய பெயர், முத்திரையை போலியாகத் தயாரித்து, ஆதார் கார்டில் திருத்தம் செய்யப் பயன்படுத்துவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. எனவே சம்பந்தப்பட்ட இ-சேவை மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ரூ.1,500-க்கு டாக்டர் கையெழுத்து; இ-சேவை மையத்தில் நூதன மோசடி - பட்டதாரிப் பெண் சிக்கியது எப்படி?!

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்கு பதிவுசெய்து சம்பந்தப்பட்ட இ-சேவை மையத்துக்குச் சென்று விசாரித்தார். டாக்டரின் முத்திரையைப் போலியாகத் தயாரித்துப் பயன்படுத்திய குற்றசாட்டுக்காக சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த சசிகலா என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். அவரிடமிருந்த போலி ஆவணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். கைதான சசிகலா, அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``சம்பந்தப்பட்ட அரசு மருத்துவரிடம் ஏற்கெனவே யாரோ வாங்கிய கையெழுத்து, சீல் ஆகியவற்றை மற்றவர்களுக்குப் பயன்படுத்தி சசிகலா மோசடியில் ஈடுபட்டுவந்திருக்கிறார். இந்த மோசடியின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று விசாரித்துக்கொண்டிருக்கிறோம்" என்றனர்.