Published:Updated:

கஞ்சா கடத்தல் கார்; உயிரைப் பணயம்வைத்து விரட்டிய போலீஸ்; திருச்சியில் திக்திக் சம்பவம்!

கஞ்சா கடத்திவந்த கார்
கஞ்சா கடத்திவந்த கார்

போலீஸ் ஏட்டு சரவணன் டூ வீலரிலிருந்து காரின் மீது ஏறி குதித்து, காரின் பேனட்டைப் பிடித்துக்கொண்டார். ஆனாலும் அந்த நபர் காரை நிறுத்தாமல் மிக வேகமாக ஓட்டியிருக்கிறார்.

கஞ்சா கடத்திவந்த நபரைப் பிடிக்க உயிரைப் பணயம்வைத்து திரைப்படக் காட்சிபோல் தனிப்படை போலீஸார் விரட்டிப் பிடித்த சம்பவம், திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா மூட்டைகள்
கஞ்சா மூட்டைகள்

திருச்சி மாநகர், சமீபகாலமாகவே கஞ்சா, குட்காவின் கூடாரமாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. மாவட்டத்தில் பல பகுதிகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் தாராளமாகக் கிடைத்துக்கொண்டிருக்கின்றன.

திருச்சி
திருச்சி

பள்ளி மாணவர்கள் பலர் இந்த போதைப்பொருள்களுக்கு அடிமையாகிவருகின்றனர். இந்த போதைப்பொருள்களால் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் ரெளடிகளின் அட்டகாசம் அதிகரித்துவருகிறது என்று பரவலாகப் பேச்சுகள் அடிப்பட்டுக்கொண்டிருக்கிற நிலையில், கஞ்சா மற்றும் போதைப்பொருள்களை ஒழிப்பதில் திருச்சி மாவட்ட போலீஸார் தீவிரம் காட்டிவருகின்றனர். இதற்கென மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன், எஸ்.பி மூர்த்தி தலைமையில் ஒரு டீம் அமைக்கப்பட்டு தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.

இந்தநிலையில் திருச்சி டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு காரில் கஞ்சா கடத்திச் செல்வதாக கமிஷனரின் தனிப்படை காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. அதன் பெயரில் மன்னார்புரம் பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவந்தனர்.

கஞ்சா கடத்திவந்த கார்
கஞ்சா கடத்திவந்த கார்

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு டாட்டா இண்டிகா காரை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், காரை ஓட்டிச் சென்ற நபர் நிறுத்தாமல் வண்டியை வேகமாக ஓட்டிச்செல்ல, உடனே அந்த காரை போலீஸார் டூ வீலரில் விரட்டி சென்றனர். செந்தண்ணீர்புரம் அருகே கார் படுவேகமாகச் சென்றுகொண்டிருந்தது.

விரட்டிப் பிடித்த போலீஸ்
விரட்டிப் பிடித்த போலீஸ்

அப்போது, போலீஸ் ஏட்டு சரவணன் என்பவர் டூ வீலரிலிருந்து காரின் மீது ஏறி குதித்து காரின் பேனட்டை பிடித்துக்கொண்டார். ஆனாலும் அந்த நபர் காரை நிறுத்தாமல் மிக வேகமாக ஓட்டியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரவணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் காரின் முன்பக்க பேனட்டில் படுத்தபடியே 2 கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில், அந்த காரைப் பிடிக்க பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் காரை துரத்திச் சென்றனர். கடைசியில் சரவணன் ஒரு கையால் காரின் ஸ்டீயரிங்கைப் பிடித்து வளைத்தபோது கார் தடுப்பு மரத்தின் மீது மோதி நின்றது.

ஐ.ஜி பாலகிருஷ்ணன்
ஐ.ஜி பாலகிருஷ்ணன்

இதில் சரவணன் காயம் அடைந்தார். பின்னால் வந்த போலீஸார் காரை ஓட்டிவந்த டிரைவரை மடக்கிப் பிடித்தனர். காயமடைந்த ஏட்டு சரவணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முகமது அனீபா
முகமது அனீபா

காரை ஓட்டிவந்தது யார் என்று போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம். ``காரை ஓட்டிவந்தவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த முகமது அனீபா. இவர் காரில் 22 கிலோ கஞ்சா பதுக்கிவைத்து எடுத்துவந்திருக்கிறார். பிடிபட்டால் பிரச்னை ஆகிவிடும் என்பதால், போலீஸார் தடுத்தும் காரை நிறுத்தாமல் சென்றிருக்கிறார். அதன் பிறகுதான் பின்தொடர்ந்து சென்று அவரை மடக்கிப் பிடித்து கைதுசெய்திருக்கிறோம். முகமது அனீபா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கிறோம். மேலும் கடத்திவரப்பட்ட 22 கிலோ கஞ்சாவையும் காரையும் பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு