Published:Updated:

திருவாரூர்: மாணவி கொலை; தலைமறைவான உறவினர்; பிடித்துக்கொடுத்த ஊர் மக்கள்!

முத்துப்பேட்டை காவல் நிலையம்

இந்தக் கொலைச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட சிவசங்கரன் தம்பிக்கோட்டை பகுதியில் பதுங்கியிருந்த நிலையில், இந்தப் பகுதி மக்கள் சிவசங்கரனைப் பிடித்து முத்துப்பேட்டை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்கள்.

திருவாரூர்: மாணவி கொலை; தலைமறைவான உறவினர்; பிடித்துக்கொடுத்த ஊர் மக்கள்!

இந்தக் கொலைச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட சிவசங்கரன் தம்பிக்கோட்டை பகுதியில் பதுங்கியிருந்த நிலையில், இந்தப் பகுதி மக்கள் சிவசங்கரனைப் பிடித்து முத்துப்பேட்டை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்கள்.

Published:Updated:
முத்துப்பேட்டை காவல் நிலையம்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் பாலிடெக்னிக் மாணவியைக் கொடூரமாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகியிருந்த இளைஞரை, அந்தப் பகுதி மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்கள். ஒருதலைக் காதலால் ஏற்பட்ட இந்த விபரீத சம்பவம் இந்தப் பகுதி மக்களை மிகுந்த அதிர்ச்சியிலும் பரபரப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

சிவசங்கரன்
சிவசங்கரன்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா, முத்துப்பேட்டை பகுதியில் தனது பாட்டியின் வீட்டில் தங்கி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவந்திருக்கிறார் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரின் தந்தை தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் வசித்துவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
காவல்துறை
காவல்துறை

இந்தநிலையில் ஜாம்புவோடை பகுதியில் இறால் பண்ணையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்துவரும் இவர்களின் உறவினரான பொதியப்பன் என்பவரின் மகன் சிவசங்கரன், ராணியை ஒருதலையாகக் காதலித்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் ராணியைத் திருமணம் செய்துகொள்ள பெண் கேட்டதாகவும், ராணியின் குடும்பத்தினர் இதற்கு சம்மதிக்க மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கரன், நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த ராணியின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொடூரமாகத் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. அதில் பலத்த காயமடைந்த ராணிக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்தக் கொலைச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட சிவசங்கரன் தம்பிக்கோட்டை பகுதியில் பதுங்கியிருந்த நிலையில், இந்தப் குதி மக்கள் சிவசங்கரனைப் பிடித்து முத்துப்பேட்டை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்கள். அவரைக் கைதுசெய்த காவல்துறையினர், விசாரணை நடத்திவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism