Published:Updated:

கன்றுக்குட்டி வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் - பெரம்பலூரில் நேபாள இளைஞர் கைது!

குற்றம்

பெரம்பலூரில் கன்றுக்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.

கன்றுக்குட்டி வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் - பெரம்பலூரில் நேபாள இளைஞர் கைது!

பெரம்பலூரில் கன்றுக்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
குற்றம்

பெரம்பலூர் மாவட்டம், அருமடல் கிராமத்தில் வசித்து வருபவர்கள் பெரியசாமி-பெருமாயி தம்பதியினர். இவர்கள் தங்கள் வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார்கள். இந்நிலையில் வீட்டில் கட்டியிருந்த கன்றுக்குட்டி ஒன்று வெளியே சுற்றித் திரிந்திருக்கிறது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் கன்றுக்குட்டி தெருவில் சுற்றி வருவதாகத் தம்பதியிடம் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்.

பெரம்பலூர்
பெரம்பலூர்

அதையடுத்து, கன்றுக்குட்டியைப் பிடிக்கச் சென்ற பெருமாயி வீட்டில்வந்து பார்த்தபோது பட்டியில் நின்றுகொண்டிருந்த மற்றொரு கன்றுக்குட்டி காணாமல் போனது தெரியவந்தது. அதனைத் தேடும்போது தனியார் கிரஷரில் வேலை பார்க்கும் வடமாநிலத்தவர்கள் தங்கும் ஷெட்டில் கன்றுக்குட்டியின் சத்தம் கேட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனால் பெருமாயி அங்கு சென்றிருக்கிறார். அப்போது கன்றுக்குட்டி கத்திக்கொண்டே வெளியே வந்திருக்கிறது. அதுவும், ஆண்கள் அணியும் பனியின் துணியால் பின்னங்கால்கள் கட்டப்பட்ட நிலையில் வந்திருக்கிறது.

குற்றம்
குற்றம்

இது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் பெருமாயி தகவலைச் சொல்ல, அவர்கள் விசாரித்தபோது... நேபாள நாட்டைச் சேர்ந்த சிவன் என்ற வாலிபர் பெருமாயி வீட்டில் பட்டியில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை அவிழ்த்துச் சென்றது தெரியவந்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கைது
கைது

கன்றுக்குட்டியின் கால்கள் கட்டப்பட்டு, காயங்கள் இருந்ததால், சந்தேகமடைந்த பெருமாயி, இது குறித்து பாடாலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயராம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டார்.

அதில் நேபாள வாலிபர் சிவன் கன்றுக்குட்டியை இயற்கைக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்ததது தெரியவந்தது. அதனால், அவரைக் கைதுசெய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபாப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism