Published:Updated:

கரூர்: பள்ளி மாணவிக்குத் திருமண ஏற்பாடு; பெற்றோர் உள்ளிட்ட 6 பேரைக் கைதுசெய்த போலீஸ்!

வரவணை
வரவணை

சந்தேகமடைந்த சமூக நலத்துறை அதிகாரிகள், சிறுமி படித்த பள்ளியில் அணுகி, அந்த மாணவி பிறந்த தேதியை சரி பார்த்தபோது, 2005 - ஆம் ஆண்டு பிறந்ததாகவும், தற்போது அவருக்கு 16 வயது மட்டுமே பூர்த்தி அடைந்துள்ளதாகவும் கண்டறிந்தனர்.

ஊரடங்கு காலத்தில் குழந்தை திருமணம்; போக்சோ சட்டத்தின் கீழ் 4 பேர் கைது!

கரூர் அருகே திருமண வயது பூர்த்தியாகாத பள்ளி மாணவி ஒருவருக்குத் திருமணம் செய்ய நடந்த முயற்சியைத் தடுத்து, அதற்கு காரணமான ஆறு நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காந்திகிராமம்
காந்திகிராமம்

கரூர் மாவட்டம் வரவணை பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு, அவரது மாமா குடியிருக்கும், கரூர் தெற்கு காந்திகிராமம், இந்திரா நகர் பகுதியில் நடத்த, ரகசியமாக திருமணம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், பள்ளி மாணவிக்கு ரகசியமாக திருமணம் ஏற்பாடு செய்யப்படும் தகவல், தான்தோன்றிமலை வட்டார சமூகநலத்துறை அலுவலர் சரஸ்வதிக்கு கிடைத்திருக்கிறது. உடனே அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பெண்ணின் திருமண வயது குறித்து ஆதாரம் கேட்டிருக்கிறார். அவர்கள் கொடுத்த பெண்ணின் வயதை ஆதார் அட்டையில் சோதித்தபோது, கடந்த 2002 -ஆம் ஆண்டு பிறந்ததாக அவர்கள் கொடுத்த ஆவணத்தில் இருந்தது.

பசுபதிபாளையம் காவல் நிலையம்
பசுபதிபாளையம் காவல் நிலையம்

இதில் சந்தேகமடைந்த சமூக நலத்துறை அதிகாரிகள், சிறுமி படித்த பள்ளியில் அணுகி, அந்த மாணவி பிறந்த தேதியை சரி பார்த்தபோது, 2005 - ஆம் ஆண்டு பிறந்ததாகவும், தற்போது அவருக்கு 16 வயது மட்டுமே பூர்த்தி அடைந்துள்ளதாகவும் கண்டறிந்தனர். இதனால், விரைந்து சென்று சிறுமியை மீட்டு குளித்தலை இந்திராநகர் பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில், சமூகநலத்துறை அலுவலர் சரஸ்வதி அளித்த புகார் அடிப்படையில், மணமகன் அவரது தந்தை மற்றும் தாய் , சிறுமியின் தந்தை மற்றும் தாய் , உறவினர் ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர். 16 வயதே நிரம்பிய பள்ளி மாணவியின் வயதை ஆவணத்தில் திருத்தி, அவருக்கு பெற்றோரே திருமணம் செய்ய முயன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு