Published:Updated:

தாடையில் கிக் விட்ட பிளாக் பெல்ட் அண்ணன்; காய்கறிக் கத்தியை இதயத்தில் சொருகிய தம்பி! - குமரி `பகீர்’

கொலை

மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அண்ணனைக் கொன்ற தம்பியை போலீஸார் கைதுசெய்தனர்.

தாடையில் கிக் விட்ட பிளாக் பெல்ட் அண்ணன்; காய்கறிக் கத்தியை இதயத்தில் சொருகிய தம்பி! - குமரி `பகீர்’

மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அண்ணனைக் கொன்ற தம்பியை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கொலை

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே திட்டுவிளை ஜோசப் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஏசுதாஸ் (60). இவருக்கு மனைவி, மூன்று மகன்கள் இருக்கின்றனர். அனைவரும் ஒரே வீட்டில் வசித்துவருகின்றனர். ஏசுதாஸின் இரண்டாவது மகன் ஜார்ஜ் எடிசன் (42). இவர் கராத்தே பயிற்சிபெற்று பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார். அவர் தம்பி மார்டின் ஜெயராஜ் (40), கூலி வேலை செய்துவருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணமான நிலையில், இருவருமே மனைவிகளை வீட்டிலிருந்து தாய் வீட்டுக்குத் துரத்தியிருக்கின்றனர். அண்ணன், தம்பி கூட்டாக வீட்டிலிருந்து மது குடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் இருவரும் சேர்ந்து மது குடித்திருக்கின்றனர். அப்போது ஒருவர் மனைவியைப் பற்றி மற்றொருவர் கமென்ட் அடித்ததில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

கைதுசெயப்பட்ட மார்ட்டின் ஜெயராஜ்
கைதுசெயப்பட்ட மார்ட்டின் ஜெயராஜ்

வாக்குவாதம் முற்றியதால் கோபமடைந்த அண்ணன் ஜார்ஜ் எடிசன், கராத்தே பாணியில் தம்பியின் தாடையில் கிக் அடித்திருக்கிறார். உதைபட்டதால் தம்பி மார்ட்டின் ஜெயராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்திருக்கிறார். அவர் உதட்டில் காயம் ஏற்பட்டிருக்கிறது. மார்டின் ஜெயராஜ் விழுந்த இடத்தில் வீட்டிலிருந்த காய்கறி நறுக்கும் கத்தி கிடந்திருக்கிறது. அதை எடுத்தவர்... தன்னுடைய அண்ணன் ஜார்ஜ் எடிசனின் நெஞ்சில் பலமாகக் குத்தியிருக்கிறார். இதனால் எடிசன் மயங்கி விழுந்திருக்கிறார். உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து வரவழைத்த மார்ட்டின் ஜெயராஜ், அண்ணனை ஆசாரிபள்ளத்திலுள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.

கொலைசெய்யப்பட்ட ஜார்ஜ் எடிசன்
கொலைசெய்யப்பட்ட ஜார்ஜ் எடிசன்

மார்ட்டின் ஜெயராஜ் ஆம்புலன்ஸில் வைத்து அண்ணன் கீழே விழுந்ததில் அடிபட்டதில் மயங்கியதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், மருத்துவமனையில் மருத்துவர்கள் ஜார்ஜ் எடிசனைப் பரிசோதித்துவிட்டு அவர் இறந்துவிட்டதாகவும், இதயத்தில் கத்தி பாய்ந்திருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் பூதப்பாண்டி காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, பூதப்பாண்டி போலீஸார் மருத்துவமனைக்குச் சென்று அண்ணனைக் கொலைசெய்த வழக்கில் தம்பி மார்ட்டின் ஜெயராஜைக் கைதுசெய்தனர்.