Published:Updated:

திருப்பத்தூர்: 75 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை! - வீடு புகுந்து அத்துமீறிய நபர் கைது

முருகன்

திருப்பத்தூரில், வீடு புகுந்து 75 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பத்தூர்: 75 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை! - வீடு புகுந்து அத்துமீறிய நபர் கைது

திருப்பத்தூரில், வீடு புகுந்து 75 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
முருகன்

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகேயுள்ள பாரதிதாசன் நகரைச் சேர்ந்த 75 வயதாகும் மூதாட்டி ஒருவர், ஆதரவின்றி தனியாக வசித்துவருகிறார். சம்பவத்தன்று இரவு 11 மணியளவில், அந்தப் பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதாகும் முருகன் என்பவர் மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து முருகனை விரட்டியிருக்கிறார்கள்.

முருகன்
முருகன்

மூதாட்டியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைக்குப் பிறகு தற்போது மூதாட்டியின் உடல்நிலை தேறிவருவதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து, திருப்பத்தூர் நகர போலீஸார் வழக்கு பதிவுசெய்து, ஏழு பிரிவுகளின்கீழ் முருகனைக் கைதுசெய்து சிறையிலடைத்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism