Published:Updated:

கேரளா: தள்ளுவண்டிக் கடையில் உணவுக்காகத் தகராறு; துப்பாக்கிச்சூட்டில் ரோட்டில் சென்றவர் பலி!

துப்பாக்கிச்சூடு

தள்ளுவண்டிக் கடையில் உணவுக்காக ஏற்பட்ட தகராறில் ரோட்டில் சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீஸார் கைதுசெய்தனர்.

கேரளா: தள்ளுவண்டிக் கடையில் உணவுக்காகத் தகராறு; துப்பாக்கிச்சூட்டில் ரோட்டில் சென்றவர் பலி!

தள்ளுவண்டிக் கடையில் உணவுக்காக ஏற்பட்ட தகராறில் ரோட்டில் சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
துப்பாக்கிச்சூடு

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூலமற்றத்தைச் சேர்ந்தவர் பிலிப் மார்டின் (34). இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு கொரோனாவுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியவர். இந்த நிலையில், பிலிப் மார்ட்டின் மூலமற்றம் அசோகா விலக்கு பகுதியில் உள்ள ரோட்டோர தள்ளுவண்டிக் கடை ஒன்றுக்கு நண்பருடன் சாப்பிடச் சென்றுள்ளார். இரவு 10:30 மணிக்கு உணவு ஆர்டர் கொடுத்துவிட்டு காத்துகொண்டிருந்திருக்கிறார்.

சனல்பாபு
சனல்பாபு

ஆனால் கடையின் உரிமையாளரான பெண் பார்சல் வாங்க வந்தவர்களுக்கு மட்டுமே உணவை வழங்கிக்கொண்டிருந்திருக்கிறார். இதையடுத்து உணவு அனைத்தும் தீர்ந்துவிட்டன என பிலிப் மார்ட்டினிடம் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து கடை உரிமையாளருக்கும், பிலிப் மார்டினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அருகே இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து பிலிப் மார்டினைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிலிப் மார்டின் பயன்படுத்திய துப்பாக்கி
பிலிப் மார்டின் பயன்படுத்திய துப்பாக்கி

இதில் ஆத்திரமடைந்த பிலிப் மார்டின் அருகே உள்ள தனது வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கே அவர் தாயார் பிலிப் மார்டின் முகத்தில் ரத்தம் வடிவதைப் பார்த்து மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் தன்னைத் தாக்கியவர்களை மிரட்ட வேண்டும் என்ற நோக்கில் அவர் வீட்டிலிருந்த இரட்டைக்குழல் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு காரில் மீண்டும் அந்த கடைக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்தவர் கற்கள், கட்டைகளைக்கொண்டு மார்டின் காரைத் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளனர்.

கேரள போலீஸார் விசாரணை
கேரள போலீஸார் விசாரணை

இதனால் மிகவும் ஆத்திரமடைந்த மார்டின், தான் எடுத்துவந்திருந்த துப்பாக்கியைக் கொண்டு வானத்தில் சுட்டுள்ளார். அதைக் கண்டு அங்கிருந்தவர்கள் பயந்து ஓடியுள்ளனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவர்கள் தன்னைத் தாக்கவருவதாக நினைத்த பிலிப் மார்ட்டின், அவர்களை நோக்கிக் கண்மூடிதனமாகச் சுட்டிருக்கிறார். அதில், பைக்கை ஓட்டிவந்த சனல்பாபு, பிரதீப் புஸ்கரன் ஆகியோர் மீது குண்டுகள் பாய்ந்தன. இதில் தனியார் பஸ் கண்டக்டராகப் பணியாற்றிவந்த சனல்பாபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரதீப் புஸ்கரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றும் துப்பாக்கிச்சூட்டில் சேதமடைந்தது.

தடயங்கள் சேகரிப்பு
தடயங்கள் சேகரிப்பு

தகவலறிந்த காஞ்சாறு இன்ஸ்பெக்டர் ஸோல்ஜிமோன், பிலிப் மார்டினைக் கைதுசெய்து அவருடைய கார், துப்பாக்கியைப் பறிமுதல் செய்து விசாரித்துவருகின்றார். மேலும் கடையின் உரிமையாளர் மற்றும் அருகே இருந்தவர்களிடமும் விசாரித்துவருகின்றனர். மார்டின் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் குண்டுகள் எங்கிருந்து வாங்கப்பட்டன என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism