Published:Updated:

`வயிற்றுவலி தீர தனி அறையில் சிறப்பு பூஜை செய்யணும்!' - சிறுமியைக் கர்ப்பமாக்கிய பூசாரி கைது

கைதான பூசாரி

பூஜை செய்வதாக அழைத்துச் சென்று சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பூசாரியை போலீஸார் கைதுசெய்தனர்.

`வயிற்றுவலி தீர தனி அறையில் சிறப்பு பூஜை செய்யணும்!' - சிறுமியைக் கர்ப்பமாக்கிய பூசாரி கைது

பூஜை செய்வதாக அழைத்துச் சென்று சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பூசாரியை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கைதான பூசாரி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த தம்பதி ஒருவரின் 15 வயது மகள் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டுவந்திருக்கிறார். முதலில் வீட்டு வைத்தியம் செய்து பார்த்து பலனளிக்காததால், மருத்துவமனைகளுக்குக் கூட்டிச் சென்றிருக்கின்றனர். ஆனாலும், சிறுமிக்கு வயிற்றுவலி தீரவில்லை. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர், கீரனூர் அருகே மணிப்பிள்ளை பகுதியைச் சேர்ந்த பூசாரி பழனி குறித்துக் கூறி, `அவரைச் சந்தித்து உங்கள் பிரச்னைகளைக் கூறினால், நிச்சயம் தீர்த்துவைத்துவிடுவார்!' என்று கூறியிருக்கின்றனர்.

இதையடுத்து, அடுத்த நாளே அந்தத் தம்பதி பூசாரியைப் பார்க்கக் கிளம்பியிருக்கின்றனர். பூசாரியைச் சந்தித்து, தங்களின் மகளுக்கு ஏற்பட்ட வயிற்றுவலி பிரச்னை குறித்து கூறி, `நீங்கள்தான் இதைச் சரிசெய்ய வேண்டும்' என்று அழுது புலம்பியிருக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அதற்கு பூசாரி பழனியோ, `சிறுமிக்கு காத்து, கருப்பு அண்டியிருக்கிறது. அதை விலக்கினால்தான், இந்தப் பிரச்னை தீரும். இதற்கு சிறப்பு பூஜை செய்ய வேண்டும். அதுவும் சிறுமையைத் தனியாக வைத்துத்தான் அந்த பூஜையைச் செய்ய வேண்டும்' என்று கூறியிருக்கிறார். மகள் நலம்பெற வேண்டும் என்பதால் பெற்றோரும் பூஜைக்குச் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.

அதையடுத்து, பெற்றோர் கண்முன்னே சிறுமியை தனி அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் பூசாரி. உள்ளே கூட்டிச் சென்றவர், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும், `நடந்ததை வெளியே சொன்னால், சாமி குத்தம் ஆகிப்போய்... நீ, உன் குடும்பத்துல இருக்குறவங்க எல்லாருமே செத்து போயிடுவீங்க' என்று சிறுமியை மிரட்டி மேலும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனால், உயிருக்கு பயந்து வெளியே வந்த சிறுமி தன் தாயிடம்கூட நடந்ததைக் கூறவில்லை. தொடர்ந்து, சிறுமியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த சிறுமியின் தாய், அவரிடம் துருவித் துருவி விசாரித்ததில், பூசாரி தன்னிடம் நடந்துகொண்ட சம்பவத்தை விவரித்திருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சிக்கே சென்ற சிறுமியின் தாய், கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இது குறித்து வழக்கு பதிவுசெய்த கீரனூர் போலீஸார், விசாரணை நடத்தினர். விசாரணையில், பூசாரி பழனி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், சிறுமி மூன்று மாதங்கள் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, கோயில் பூசாரி பழனியை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

வயிற்றுவலிப் பிரச்னையை சரிசெய்யக் கோரி பூசாரியை சந்திக்கச் சென்ற சிறுமியை, பூசாரி கர்ப்பமாக்கிய சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கைதான பூசாரி
கைதான பூசாரி

இது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ``பழனி கீரனூர் பகுதியில் உள்ள கருப்பசாமி கோயிலில் பல வருடங்களாக பூசாரியாக இருப்பதுடன், அந்தப் பகுதி மக்களுக்கு அருள்வாக்கும் கூறிவந்திருக்கிறார். பூசாரி மந்திரித்து திருநீர் கொடுத்தால், நீண்டநாள் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களும் குணமாவார்கள் என்பது அந்தப் பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்திருக்கிறது. வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து சென்றிருக்கின்றனர். பூசாரி வாக்குமூலத்தில் அந்தச் சிறுமியை மட்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்திருக்கிறார். ஆனாலும், நீண்டகாலமாக குழந்தைகள், பெண்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வந்திருப்பதால், அவரை மேற்கொண்டு விசாரித்துவருகிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism