Published:Updated:

அருப்புக்கோட்டை வழியே மதுரைக்குக் கடத்த முயன்ற 2,340 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது!

பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியே மதுரைக்குக் கடத்த முயன்ற 2,340 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

அருப்புக்கோட்டை வழியே மதுரைக்குக் கடத்த முயன்ற 2,340 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியே மதுரைக்குக் கடத்த முயன்ற 2,340 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Published:Updated:
பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியே மதுரைக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக விருதுநகர் குடிமைப்பொருள் வழங்கல் தடுப்புப்பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட்மேரி தலைமையிலான போலீஸார் விருதுநகர் மாவட்டம் ஆவியூர், அருப்புக்கோட்டை பகுதியில் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லோடு ஆட்டோ ஒன்றைத்தடுத்து நிறுத்தி சந்தேகத்தின்பேரில் சோதனை நடத்தினர். இதில் அந்த வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திக்கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து, வாகன ஓட்டுநரான மதுரையைச் சேர்ந்த மதன்குமாரை குடிமைப்பொருள் வழங்கல் தடுப்புப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். மேலும் வாகனத்தில் தலா 45 கிலோ எடையிலான 52 மூட்டைகளில் இருந்த 2,340 கிலோ ரேஷன் அரிசியையும், லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்து விருதுநகர் கொண்டுவந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோ
பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோ
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் மதுரையைச் சேர்ந்த ராஜகணேஷ், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பிரபா ஆகிய மேலும் இருவரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism