Published:Updated:

சென்னை: மூதாட்டியிடம் நகைகளைப் பறிக்க முயன்று தப்பிய ரௌடி... சிசிடிவி உதவியுடன் கைதுசெய்த போலீஸ்!

ரௌடி மணிகண்டன்

வீட்டு வாசலில் அமர்ந்திருந்த மூதாட்டியிடமிருந்து நகைகளைப் பறிக்க முயன்ற ரௌடியை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை: மூதாட்டியிடம் நகைகளைப் பறிக்க முயன்று தப்பிய ரௌடி... சிசிடிவி உதவியுடன் கைதுசெய்த போலீஸ்!

வீட்டு வாசலில் அமர்ந்திருந்த மூதாட்டியிடமிருந்து நகைகளைப் பறிக்க முயன்ற ரௌடியை போலீஸார் கைது செய்தனர்.

Published:Updated:
ரௌடி மணிகண்டன்

சென்னை திரு.வி.க.நகர், கென்னடி சதுக்கம், காமராஜர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (63). இவர் கடந்த 10.7.2022-ம் தேதி இரவு வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர், கோவிந்தம்மாளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தங்க நகைகளை பறிக்க முயற்சி செய்துள்ளார். கோவிந்தம்மாள், சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் அங்கு வந்துள்ளனர். அதைப்பார்த்ததும் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கோவிந்தம்மாள் திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

 கைது
கைது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன்பேரில் வழக்கு பதிவுசெய்த போலீஸார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது கோவிந்தம்மாளிடம் நகைகளைப் பறிக்க முயன்றது திரு.வி.க.நகரைச் சேர்ந்த மணிகண்டன் (25) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீஸார், கத்தி ஒன்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் மணிகண்டன், திரு.வி.க நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும், இவர் மீது ஏற்கெனவே இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உட்பட 10 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. விசாரணைக்குப்பிறகு மணிகண்டன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இது குறித்து திரு.வி.க.நகர் போலீஸார் கூறுகையில், ``மூதாட்டி கோவிந்தம்மாள் எப்போதும் கழுத்தில் நகை அணிந்திருப்பார். அதை நோட்டமிட்ட பிரபல ரௌடி மணிகண்டன், மூதாட்டியை மிரட்டி நகைகளைப் பறிக்க திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று இரவு தனியாக வீட்டின் வாசலில் கோவிந்தம்மாள் அமர்ந்திருப்பதைக் கவனித்த மணிகண்டன், கத்தியைக் காட்டி நகைகளைப் பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது மூதாட்டி கோவிந்தம்மாள், சுதாரித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார். அதனால், நகைகளை கொள்ளையடிக்க முடியாமல் மணிகண்டன் தப்பிச் சென்றுவிட்டார். இந்த வழக்கில் மணிகண்டனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.