Published:Updated:

சென்னை: டிபன் கடை வைப்பதில் தகராறு; பெண்ணை பிளேடால் வெட்டிய கடைக்காரர் கைது - என்ன நடந்தது?

கைது

டிபன் கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை ஆபாசமாகப் பேசிய சிக்கன் கடைக்காரரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

சென்னை: டிபன் கடை வைப்பதில் தகராறு; பெண்ணை பிளேடால் வெட்டிய கடைக்காரர் கைது - என்ன நடந்தது?

டிபன் கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை ஆபாசமாகப் பேசிய சிக்கன் கடைக்காரரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

Published:Updated:
கைது

சென்னை திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் கவிதா (50) (பெயர் மாற்றம்). இவர் அம்பேத்கர் நகர் 1-வது தெருவில் டிபன் கடை நடத்திவருகிறார். இவரின் கடையின் அருகில் சிக்கன் கடை நடத்திவருபவர் முனுசாமி. கவிதாவுக்கும் முனுசாமிக்கும் கடை நடத்துவதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்திருக்கிறது. மேலும், கவிதாவை அந்தத் தெருவில் டிபன் கடை நடத்தக் கூடாது என்று முனுசாமி கூறிவந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 18.1.2023-ம் தேதி கவிதாவுக்கும் முனுசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கவிதாவை ஆபாசமாகத் திட்டிய முனுசாமி, கவிதாவைத் தாக்கியிருக்கிறார். மேலும், பிளேடால் கவிதாவை வெட்டி, கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

முனுசாமி
முனுசாமி

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த கவிதா, மருத்துவமனையின் சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர் முனுசாமி மீது திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், முனுசாமி மீது பெண்கள் வன்கொடுமைத் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்தனர். பின்னர் முனுசாமியைப் பிடித்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு முனுசாமியைக் கைதுசெய்த போலீஸார், அவரிடமிருந்த பிளேடையும் பறிமுதல் செய்தனர். முனுசாமி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.