Published:Updated:

திருமணம் மீறிய உறவு; மின்வாரிய ஊழியரைக் கொலைசெய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது!

கொலைசெய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது

திருமணம் மீறிய உறவைக் கண்டித்த கணவனை, இளைஞர்கள் இருவருடன் சேர்ந்து கொலைசெய்துவிட்டு நாடகமாடிய மனைவியை போலீஸார் கைதுசெய்தனர்.

திருமணம் மீறிய உறவு; மின்வாரிய ஊழியரைக் கொலைசெய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது!

திருமணம் மீறிய உறவைக் கண்டித்த கணவனை, இளைஞர்கள் இருவருடன் சேர்ந்து கொலைசெய்துவிட்டு நாடகமாடிய மனைவியை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கொலைசெய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அணிக்கலக்கியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் மகன் முத்துராமலிங்கம் (45). இவர் கடந்த வருடம் மின்வாரியத் துறையில் பணி கிடைத்து, மதுரை அரசரடியில் பயிற்சி பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை-2) காலை நரிக்குடி-திருச்சுழி சாலையில் காரேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே படுகாயங்களுடன் முத்துராமலிங்கம் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

இதனையடுத்து பொதுமக்கள் திருச்சுழி காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த திருச்சுழி போலீஸார் சடலமாகக் கிடந்த முத்துராமலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்தவரின் உறவினர் முருகன் என்பவர் முத்துராமலிங்கத்தின் சாவில் மர்மம் இருப்பதாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்த திருச்சுழி காவல்துறையினர், நடந்தது திட்டமிட்ட கொலையா அல்லது விபத்தில் சிக்கி இறந்தாரா எனப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முத்துராமலிங்கம்
முத்துராமலிங்கம்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சிவா
சிவா

சந்தேகத்தின்பேரில் முத்துராமலிங்கத்தின் மனைவி சுனிதாவிடம் (43) போலீஸார் விசாரணை மேற்கொள்கையில், அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், ஏற்கெனவே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரைத் திருமணம் செய்து அவருடன் வாழ்ந்துவந்ததும் தெரியவந்தது. குடும்பத் தகராறு காரணமாக, 20 வருடங்களுக்கு முன்பு சுனிதா கிறிஸ்தவ பாதிரியாரைப் பிரிந்திருக்கிறார். பின்னர் தன் மகளுடன் தனியே வசித்துவந்திருக்கிறார். அப்போது கேரளாவில் வொர்க்‌ஷாப்பில் வேலை செய்துவந்த முத்துராமலிங்கத்துடன் பழக்கம் ஏற்பட்டு, சுனிதா திருச்சுழிக்கு வந்திருக்கிறார். இந்நிலையில் திருச்சுழிப் பகுதிக்கு வந்தவர்கள், பின்பு அங்கிருந்து அணிக்கலக்கியேந்தல் கிராமத்தில் புதிதாக வீடுகட்டி அங்கு குடியேறியிருக்கின்றனர்.

பிழைப்புக்காக, முத்துராமலிங்கம் வொர்க்‌ஷாப் வைத்து நடத்திவந்திருக்கிறார். இந்நிலையில், ஒரு வருடத்துக்கு முன்பு அவருக்கு மின்வாரியத்துறையில் பணி கிடைத்ததால், மதுரை அரசரடியில் பயிற்சி பெற்றுவந்ததாகக் கூறப்படுகிறது.

முத்துராமலிங்கம் மதுரையில் தங்கியிருந்து வேலை பார்த்துவந்த நிலையில், நேரம் கிடைக்கும்போது மட்டும் அணிக்கலக்கியேந்தலிலுள்ள தனது வீட்டுக்கு வந்து சென்றிருக்கிறார். இதற்கிடையில், சுனிதாவுக்கும், கணவர் முத்துராமலிங்கத்தின் வொர்க்‌ஷாப்பில் வேலை பார்த்து வந்த பள்ளிமடத்தைச் சேர்ந்த மலையரசன் (22) என்பவருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது. இந்த விஷயம் முத்துராமலிங்கத்துக்கு தெரியவரவும், அவர் சுனிதாவை எச்சரித்துக் கண்டித்திருக்கிறார்.

சுனிதா
சுனிதா
மலையரசன்
மலையரசன்

இதனால் ஆத்திரமடைந்த சுனிதா, செல்போனில் மலையரசனைத் தொடர்புகொண்டு, தன் கணவரைக் கொலைசெய்து... சடலத்தை விபத்து நடந்ததுபோல் செட்-அப் செய்யுமாறு திட்டம்போட்டுக் கொடுத்திருக்கிறார்.

இதனையடுத்து சுனிதா, மலையரசன் அவர் நண்பர் சிவா(23) ஆகிய மூவரும் சேர்ந்து, இரவு கட்டிலில் வெளியே தூங்கிக்கொண்டிருந்த முத்துராமலிங்கத்தை அடித்துக் கொலை செய்திருக்கின்றனர். பின்னர் அவர் சடலத்தை டூ வீலரில் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு எடுத்துச் சென்று நரிக்குடி - திருச்சுழி சாலையில் காரேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே விபத்தில் தூக்கி வீசப்பட்டதுபோல் செட்டப் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றனர்.

இதையடுத்து, முத்துராமலிங்கத்தின் மனைவி சுனிதா, மலையரசன், சிவா மூவரையும் திருச்சுழி காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.