Published:Updated:

தலையில் ரத்த காயத்துடன் மயங்கிக் கிடந்த தாய்; மாயமான தங்கச் சங்கிலி - நண்பரின் செயலால் அதிர்ந்த மகன்

கைதான வினோத்

தனியாகத் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணைத் தாக்கி தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற இளைஞரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

தலையில் ரத்த காயத்துடன் மயங்கிக் கிடந்த தாய்; மாயமான தங்கச் சங்கிலி - நண்பரின் செயலால் அதிர்ந்த மகன்

தனியாகத் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணைத் தாக்கி தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற இளைஞரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

Published:Updated:
கைதான வினோத்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளை குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மலர் (60). இவர் தனது வீட்டின் கீழ்த் தளத்தில் வசித்து வருகிறார். இவருடைய மகன் செந்தில்குமார், தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதே வீட்டில் மாடியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் வீட்டின் கீழ்த்தளத்தில் வசித்து வரும் மலர், கடந்த தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் வீட்டின் வாசல் கதவைத் திறந்து வைத்துவிட்டுத் தனியாகத் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது நள்ளிரவு திடீரென தன் தாயின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டின் மேற்தளத்திலிருந்து மகன் செந்தில்குமார் ஓடிவந்து பார்த்திருக்கிறார். அப்போது மலர் தலையில் ரத்தக் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்திருக்கிறார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்கச் சங்கிலியை யாரோ திருடிச் சென்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

கொள்ளை
கொள்ளை

ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்த தன் தாயை, உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார் செந்தில்குமார். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மலருக்கு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து, நன்னிலம் காவல் நிலையத்தில் செந்தில்குமார் புகார் அளித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், குடவாசல் அருகே உள்ள கீழ உத்திரங்குடிபகுதியைச் சேர்ந்த வினோத் என்ற நபரைக் கைது செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைது
கைது

இதுகுறித்து பேசும் காவல்துறையினர், ``கைதான வினோத் செந்தில்குமாரின் மிகவும் நெருக்கமான நண்பர். இவர்தான் தன் நண்பர் செந்தில்குமாரின் தாய் மலரைக் கொடூரமாகத் தலையில் தாக்கி, இரண்டு சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளார். செந்தில்குமாரின் வீட்டிற்கு வினோத் அடிக்கடி வந்து சென்றுள்ளதால், வீட்டின் கீழ்த்தளத்தில் செந்தில்குமாரின் தாய் மலர் தனியாகத்தான் தூங்குவார் என்பதை ஏற்கெனவே அறிந்து, இந்த திருட்டு சம்பவத்தில் வினோத் ஈடுபட்டிருக்கிறார்’’ எனத் தெரிவித்தார்கள். தன் நண்பனே தன் தாயைக் கொடூரமாகத் தாக்கி நகையைப் பறித்துச் சென்றிருக்கிறார் என்பதை அறிந்த செந்தில்குமார் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism