Published:Updated:

``நானும் டாக்டர்தான்..!" - இளம்பெண்ணை ஏமாற்றி லட்சங்களைச் சுருட்டிய பலே ஆசாமி சிக்கியது எப்படி?

கைது

திருமண வரன் தேடிய இளம்பெண்ணை ஏமாற்றி லட்சங்களைச் சுருட்டிய இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.

``நானும் டாக்டர்தான்..!" - இளம்பெண்ணை ஏமாற்றி லட்சங்களைச் சுருட்டிய பலே ஆசாமி சிக்கியது எப்படி?

திருமண வரன் தேடிய இளம்பெண்ணை ஏமாற்றி லட்சங்களைச் சுருட்டிய இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கைது

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், திருமணத்துக்கு வரன் தேடி இணையதளம் மூலம் பதிவுசெய்திருக்கிறார். இந்த நிலையில், இவரைத் திருமணம் செய்துகொள்வதாக சென்னை, நாவலூரைச் சேர்ந்த கார்த்திக் ராஜ் என்ற தினேஷ் கார்த்திக் (28) கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, இருவரும் நேரில் சந்திக்காமலேயே தொலைபேசியில் பேசிவந்ததாகக் கூறப்படுகிறது.

கார்த்திக், தன்னை மருத்துவர் என அந்தப் பெண்ணிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு நம்பவைத்திருக்கிறார். ஆசையாகப் பேசி, அவ்வப்போது பணம், ஐபோன் எனப் பரிசுகளையும் கேட்டுப் பெற்றிருக்கிறார். அவரை நம்பி இதுவரை பெண் மருத்துவர் ஏறத்தாழ 13 லட்சம் ரூபாய் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

மோசடி
மோசடி

ஆனால், பெண் மருத்துவரை மட்டும் சந்திக்காமல் தவிர்த்துவந்திருக்கிறார். ஒருகட்டத்தில் சந்தேகமடைந்த அந்தப் பெண் மருத்துவர், உறவினர் ஒருவரிடம் தெரிவிக்க அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த இளைஞர் இளம்பெண்ணை ஏமாற்றியது உறுதியானதால், அவரைத் தேடிப்பிடித்து கைதுசெய்தனர்.

கார்த்திக்கிடம் விசாரித்ததில், இந்த மருத்துவர்போலப் பல பெண்களை ஏமாற்றியிருப்பது தெரியவந்திருக்கிறது. போலீஸார் கார்த்திக்கிடமிருந்து ரூ.98 ஆயிரம் ரொக்கம், ஐந்து செல்போன்கள், ஒரு பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருப்பதாகத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.