Published:Updated:

`மனைவிக்குப் பாலியல் தொல்லை; நண்பனைக் கொலை செய்து வீசிய இளைஞர்!' - நடந்தது என்ன?

வெங்கடேஷ் மனைவியிடம், தினேஷ்வரன் தகாத முறையில் நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த வெங்கடேஷ், அவருடைய தம்பி கிருஷ்ணராஜ் இருவரும் தினேஷ்வரனை அழைத்துக் கேட்டிருக்கின்றனர். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தம்மண்ணசெட்டி தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன் என்ற தினேஸ்வரன் (24). இவர், திருப்பூரிலுள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. தினேஷ்வரனின் பெற்றோர், உறவினர்கள் அவரைப் பல்வேறு இடங்களில் தேடியும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அச்சமடைந்தவர்கள் இது குறித்து குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

கொலை
கொலை

இதற்கிடையே, தினேஷ்வரனை, அவருடைய நண்பர் வெங்கடேஷ் என்பவர் அடித்துக் கொலை செய்ததாகத் தகவல் பரவியது. இந்தத் தகவலை அறிந்த தினேஷ்வரனின் பெற்றோர், வெங்கடேஷ் வீட்டுக்குச் சென்று தினேஷ்வரனைப் பற்றிக் கேட்டனர். அப்போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து, தகவலறிந்த குமாரபாளையம் காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெங்கடேஷை, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில், போலீஸாரின் விசாரணையில், தினேஷ்வரனை வெங்கடேஷும், அவருடைய தம்பி கிருஷ்ணராஜும் சேர்ந்து அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைதுசெய்த போலீஸார், அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தினர்.

அதில், வெங்கடேஷ் மனைவியிடம், தினேஷ்வரன் தகாத முறையில் நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த வெங்கடேஷ், அவருடைய தம்பி கிருஷ்ணராஜ் இருவரும் தினேஷ்வரனை அழைத்துக் கேட்டிருக்கின்றனர். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர்களுக்குள் தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த வெங்கடேஷ், அவருடைய தம்பி கிருஷ்ணராஜ் இருவரும் சேர்ந்து தினேஷ்வரனைத் தாக்கியிருக்கின்றனர். அதில், படுகாயமடைந்த தினேஷ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அண்ணன், தம்பி இருவரும் கொலையை மறைக்க முடிவு செய்து, தினேஷ்வரனின் உடலை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி, பழையபாளையம் பகுதிக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். பின்னர், காவிரி ஆற்றில் அரவிந்தனின் உடலை வீசியிருக்கின்றனர்.

காவிரி
காவிரி

தற்போது, போலீஸ் விசாரணையில் அண்ணன். தம்பி இருவரும் தினேஷ்வரனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். காவிரியில் அதிக உபரிநீர் திறந்துவிடப்பட்டிருப்பதால், அவரின் உடலைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக போலீஸார் கூறுகின்றனர். மனையிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக, நண்பனை, சகோதரரோடு சேர்ந்து இளைஞர் ஒருவர் கொலை செய்து, காவிரி ஆற்றில் வீசிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`உடலை தனித்தனியாக வெட்டி ஆற்றில் வீசினார்!' - அண்ணிக்காக நண்பனைக் கொலை செய்த நாமக்கல் இளைஞர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு