Published:Updated:

ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தவர் அடித்துக் கொலை! - கைதான இளைஞர் பகீர் வாக்குமூலம்

கைதான இளைஞர்

சென்னை, மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தவரை அடித்துக் கொலைசெய்த இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தவர் அடித்துக் கொலை! - கைதான இளைஞர் பகீர் வாக்குமூலம்

சென்னை, மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தவரை அடித்துக் கொலைசெய்த இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
கைதான இளைஞர்

சென்னை, மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகில் பெயர் விலாசம் தெரியாத ஒருவர் ரத்தக் காயங்களுடன் இறந்துகிடப்பதாக உதவும் கரங்கள் அமைப்புக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த அமைப்பைச் சேர்ந்த ரோஜா என்பவர், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதையடுத்து மயிலாப்பூர் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று இறந்துகிடந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

கொலை
கொலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பின்னர் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது இறந்துகிடந்தவரிடம் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் காட்சிகளும் பதிவாகியிருந்தன. இதையடுத்து ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தவரைத் தாக்கியது யாரென்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் ரமேஷ் என்றும், மயிலாப்பூர் பலக்குமா நகரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. ரமேஷைப் பிடித்த போலீஸார் அவரிடம் விசாரித்தபோது, `ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தவரிடம் மது குடிக்கப் பணம் கேட்டேன். ஆனால் அவர் தரவில்லை. அதனால் அடித்து உதைத்ததோடு கீழே தள்ளிவிட்டேன்' என்று கூறியிருக்கிறார். இதையடுத்து இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றிய போலீஸார், ரமேஷைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும் இறந்தவர் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.