Published:Updated:

சென்னை: பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி; போக்சோவில் கைதான திமுக பிரமுகர் மகன்! - என்ன நடந்தது?

கைது
News
கைது

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை, போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Published:Updated:

சென்னை: பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி; போக்சோவில் கைதான திமுக பிரமுகர் மகன்! - என்ன நடந்தது?

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை, போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

கைது
News
கைது

சென்னையை அடுத்த சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் அண்மையில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், ``என்னுடைய மகள், பத்தாம் வகுப்பு படித்துவருகிறாள். அவள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கடந்த 30.1.2023-ம் தேதி எனக்கு போன் செய்து, `உடனே பள்ளிக்கு வாங்க... உங்கள் மகள் விஷயமாக உங்களிடம் பேச வேண்டும்' என்று கூறினார். உடனே நான் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரைச் சந்தித்துப் பேசினேன். அப்போது அவர், என்னுடைய மகள் கடந்த ஒருவாரமாக வகுப்பறையில் சோர்வாகவும் இரண்டு தடவை வகுப்பறையில் மயங்கி விழுந்துவிட்டதாகக் கூறினார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
சித்திரிப்புப் படம்

இதையடுத்து என் மகளிடம் அவரின் வகுப்பு ஆசிரியை விசாரித்தபோது, எங்கள் பகுதியில் வசிக்கும் விக்கி என்பவர் என் மகளைக் கத்தி முனையில் மிரட்டி பைக்கில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. அப்போது, விக்கி, மதுபானம் வாங்கி அதில் வெள்ளை நிறத்திலான பவுடரைக் கலந்து என் மகளை கட்டாயப்படுத்தி குடிக்கவைத்திருக்கிறார். மேலும், விக்கியின் நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அந்தப் பயத்தில்தான் தனக்கு மயக்கம், சோர்வு வருகிறது என ஆசிரியையிடம் தெரிவித்திருக்கிறார். என் மகளின் வகுப்பு ஆசிரியைக் கூறிய தகவலை, என்னிடம் தலைமை ஆசிரியர் கூறியதோடு, இந்தப் பிரச்னையை தீர்க்கப் பாருங்கள் என்று கூறினார்.

தலைமை ஆசிரியைக் கூறிய தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக என்னுடைய கணவருக்கு போன் செய்து விவரத்தைக் கூறினேன். அவரும் நானும் வீட்டில் வைத்து என் மகளை விசாரித்தபோது, விக்கி என்கிற பையன், சிறிய பேனா கத்தியை வைத்துக்கொண்டு, `நீ பேசாமல் போனால் உன் அப்பாவையும் அம்மாவையும் கத்தியை வைத்து கிழித்து விடுவேன்' என மிரட்டி வந்தது தெரியவந்தது. பின்னர், விக்கியின் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு என்னுடைய மகளை அழைத்துச் சென்று பேசிக்கொண்டிருக்கும்போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருக்கிறான். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக விக்கி என் மகளுக்குத் தொல்லை கொடுத்து வந்ததாக என் மகள் எங்களிடம் தெரிவித்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக ஒரு நாள் காலையில், பள்ளிக்கு என் மகள் செல்லும்போது காலை 7:30 மணிக்கு வழியில் மடக்கி மிரட்டி பைக்கில் அவளை நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது அவரின் நண்பர் வெளியில் சென்றுவிட்டார். இதையடுத்து, விக்கி ஏற்கெனவே வாங்கிவைத்திருந்த மதுவில் வெள்ளை நிற மாவு போன்ற ஒன்றைக் கலந்து குடிக்கச் சொல்லி வற்புறுத்தி, குடிக்க வைத்திருக்கிறார். அதைக் குடித்தவுடன் என் மகள் அரை மயக்க நிலைக்குச் சென்றிருக்கிறார். அப்போது என்னுடைய மகளின் ஆடையைக் கழட்டிவிட்டு, அன்று முழுவதும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் விக்கி.

விக்கி
விக்கி

பின்னர், `இது குறித்து வெளியே சொன்னால் உன் அப்பா, அம்மாவை கத்தியை வைத்து கிழித்துவிடுவேன்' என்று மிரட்டிய விக்கி, அன்று மாலை 4 மணியளவில் பள்ளி அருகில் விட்டுச் சென்றுவிட்டார். அதனால்தான் மிகவும் பயமாக இருப்பதாகவும், உடல் சோர்வு ஏற்படுவதாகவும், மயக்கம் வருவதாகவும் எங்களிடம் என் மகள் கூறி அழுதாள். எனவே, என்னுடைய 15 வயது மகளைக் கத்தியை வைத்து மிரட்டி வலுக்கட்டாயமாக பைக்கில் அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக விக்கியை அழைத்து விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதனடிப்படையில் போலீஸார் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் விக்கி மீது வழக்கு பதிவுசெய்து அவரைத் தேடிவந்தனர். ஆனால், விக்கி தலைமறைவாகிவிட்டார். இந்தச் சூழலில் விக்கி, தாம்பரத்திலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் தலைமறைவாக இருக்கும் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார், விக்கியைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான இளைஞர் தி.மு.க பிரமுகரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.