Published:Updated:

``புலிக்குட்டி ரூ.25 லட்சம்; ஆர்டர்செய்தால் 10 நாள்களில் டெலிவரி!" - விளம்பரம் வெளியிட்ட இளைஞர் கைது

புலிக்குட்டி விளம்பரம் (உள்படம்: பார்த்திபன்)

`புலிக்குட்டி விற்பனை’ என ஆன்லைனில் விளம்பரம் வெளியிட்ட இளைஞரை வனத்துறையினர் கைதுசெய்தனர்.

``புலிக்குட்டி ரூ.25 லட்சம்; ஆர்டர்செய்தால் 10 நாள்களில் டெலிவரி!" - விளம்பரம் வெளியிட்ட இளைஞர் கைது

`புலிக்குட்டி விற்பனை’ என ஆன்லைனில் விளம்பரம் வெளியிட்ட இளைஞரை வனத்துறையினர் கைதுசெய்தனர்.

Published:Updated:
புலிக்குட்டி விளம்பரம் (உள்படம்: பார்த்திபன்)

``புலிக்குட்டி விற்பனைக்கு உள்ளது. அதன் விலை ரூ.25 லட்சம். தேவைப்படுவோர் அணுகவும்’’ என்ற தகவலோடு செல் நம்பர் குறிப்பிடப்பட்டிருந்த விளம்பரம் ஆன்லைனிலும், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களிலும் சுற்றிக்கொண்டிருந்தது. இது குறித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் சென்றது. விசாரித்தபோது, அந்த விளம்பரத்தை வெளியிட்ட நபர் வேலூர் சார்பனாமேடு பகுதியில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.

பார்த்திபன் வைத்திருந்த வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்
பார்த்திபன் வைத்திருந்த வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்

இதையடுத்து, அங்கு விரைந்த வேலூர் வனத்துறையினர், அவரைப் பிடித்து விசாரித்தபோது, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்த 24 வயதாகும் இளைஞர் பார்த்திபன் என்பது தெரியவந்தது. அவரின் செல்போனைக் கைப்பற்றி ஆய்வு செய்ததில், பூனைக்குட்டிக்கு சாதம் பிசைந்து வைப்பதைப்போல புலிக்குட்டிகளுக்கு சாதம் பிசைந்து வைக்கும் படங்களை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸாக வைத்திருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த படத்துக்குக்கீழ் ``இது மூன்று மாத குட்டி. புக்கிங் செய்தால் 10 நாள்களில் டெலிவரி செய்யப்படும். விலை ரூபாய் 25 லட்சம்!’’ என்று கேப்ஷனையும் தெளிவாக எழுதி பதிவு செய்திருந்தார். இதையடுத்து, அவர் தங்கியிருந்த வீடு முழுவதும் தேடிப் பார்த்த வனத்துறையினருக்கு புலிக்குட்டி அல்ல பூனைக்குட்டிகூட சிக்கவில்லை. ஒருவேளை பணத்துக்காக இப்படி மோசடி செய்திருப்பாரா? என்ற கோணத்தில் கைதுசெய்து, விசாரணைக்கு உட்படுத்தினர்.

கைதுசெய்யப்பட்ட பார்த்திபன்
கைதுசெய்யப்பட்ட பார்த்திபன்

அப்போது, பார்த்திபனின் நண்பன் தமிழ் என்பவர் சென்னை அம்பத்தூரில் வசித்துவருவதும், அவர் செல்லப்பிராணிகளை வாங்கி விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து, சென்னை விரைந்த வனத்துறையினர் தமிழையும் பிடித்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். புலிக்குட்டி விற்பனை வெறும் விளம்பர மோசடியா அல்லது எங்கேனும் மறைத்து வைத்திருக்கிறார்களா? வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸில் வைக்கப்பட்டிருந்த புலிக்குட்டிகளின் படம் எங்கே எடுக்கப்பட்டது? ஏற்கெனவே புலிக்குட்டிகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்திருக்கிறார்களா? என்று பல்வேறு கோணங்களில் இருவரிடமும் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.