Published:Updated:

பெங்களூரு டு சென்னை: காரில் வந்து கொள்ளையடித்த இளைஞர் - போலீஸில் சிக்கியது எப்படி?!

கொள்ளை வழக்கில் கைதான ஆனந்த்

பெங்களூருவிலிருந்து சென்னைக்கு காரில் வந்த இளைஞர், இரண்டு கடைகளில் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

பெங்களூரு டு சென்னை: காரில் வந்து கொள்ளையடித்த இளைஞர் - போலீஸில் சிக்கியது எப்படி?!

பெங்களூருவிலிருந்து சென்னைக்கு காரில் வந்த இளைஞர், இரண்டு கடைகளில் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

Published:Updated:
கொள்ளை வழக்கில் கைதான ஆனந்த்

சென்னை, பாரிமுனை ரத்தன் பஜார் பகுதியில் பொம்மைகள் விற்கும் கடை நடத்தி வருபவர் மூசா (62). இவரின் பக்கத்து கடையில் முகேஷ் என்பவர் துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 1.7.2022-ம் தேதி இரவு இருவரும் கடைகளைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றனர். பின்னர் 2.7.2022-ம் தேதி கடையை திறக்க வந்தபோது பூட்டுகள் உடைக்கப்பட்டு மூசாவின் கடையிலிருந்து 1,40,000 ரூபாயும், முகேஷ் கடையிலிருந்து 5 லட்சம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

ஆனந்த்
ஆனந்த்

இது குறித்து இருவரும் பூக்கடை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது காரில்வந்த மர்ம நபர் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த காட்சிகள் பதிவாகியிருந்தன. அதனடிப்படையில் போலீஸார் காரின் பதிவு நம்பரை கொண்டு விசாரணை நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விசாரணையில் கர்நாடகா மாநிலம், பெங்களூரு கோழிப்பாரம் கேட் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (34) என்பவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தை பிடித்த போலீஸார் அவரிடமிருந்து 3,99,500 ரூபாய் மூன்று செல்போன்கள், குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய சொகுசு கார், பூட்டு உடைக்க பயன்படும் இரும்பு பொருள்கள், கையுறைகள், முகமூடிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்
பறிமுதல் செய்யப்பட்ட பணம்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``பெங்களுரூவிலிருந்து சென்னைக்கு காரில்வந்து கொள்ளைச் சம்பவத்தில் ஆனந்த் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்மீது பெங்களூருவில் 10 வழக்குகள், ஓசூர் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் உட்பட 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.