Published:Updated:

சென்னை: பூட்டிய கதவை உடைத்து நகைகளைக் கொள்ளையடித்த இளைஞர்... காட்டிக்கொடுத்த சிசிடிவி!

கைது

பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகைகளைக் கொள்ளையடித்த இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை: பூட்டிய கதவை உடைத்து நகைகளைக் கொள்ளையடித்த இளைஞர்... காட்டிக்கொடுத்த சிசிடிவி!

பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகைகளைக் கொள்ளையடித்த இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கைது

சென்னை, கொளத்தூர் ராஜன் நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரின் மனைவி சங்கீதா. இவர் கடந்த 6.7.2022-ம் தேதி இரவு வீட்டின் கதவை பூட்டிவிட்டு மறுநாள் காலையில் கண்விழித்தபோது, வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த வளையல், செயின், மோதிம் உட்பட 20 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இது குறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் சங்கீதா புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர்.

கைதான ஹரிகிருஷ்ணன்
கைதான ஹரிகிருஷ்ணன்

சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராப் பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு நபர் வீட்டுக்குள் நுழையும் காட்சி பதிவாகியிருந்தது. அவர் யார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (20) எனத் தெரியவந்தது. இதையடுத்து ஹரி கிருஷ்ணனிடம் போலீஸார் விசாரித்தபோது அவர் நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரிடமிருந்து 20 சவரன் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பிறகு ஹரிகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!