Published:Updated:

கத்தி, அரிவாளுடன் போஸ் கொடுத்த போட்டோவை ஷேர் செய்த இளைஞர்; கைது செய்த போலீஸார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அரிவாளுடன் போஸ் கொடுத்த அமச்சார்
அரிவாளுடன் போஸ் கொடுத்த அமச்சார்

தூத்துக்குடியில் அரிவாள், கத்தியை கையில் ஏந்தி போஸ் கொடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியதுடன், ஊருக்குள் அரிவாளுடன் வலம் வந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி இரவு 10 மணியில் இருந்தது 25-ம் தேதி வரையிலும் தொடர்ந்து 52 மணிநேரம் ’ஸ்டார் மிங் ஆபரேஷன்’ மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆபரேஷனில் மொத்தம் 21,592 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில், 3,325 பேர் கைது செய்யப்பட்டு, அதில் 2,526 பேர் தாங்கள் எந்தக் குற்றங்களிலும் ஈடுபட மாட்டோம் என நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.

அரிவாளுடன் அமச்சார்
அரிவாளுடன் அமச்சார்

இவர்களிடமிருந்து கத்தி, வாள், அரிவாள் என 1,110 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரவுடிகள் மீதான இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என மீடியாக்களிடம் கூறியிருக்கிறார் தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இந்த ஆபரேஷனில் 188 பேர் விசாரணை செய்யப்பட்டு, 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட 55 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சோதனை நடைபெற்றுக் கொண்டிந்தபோது அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ ஒன்று தூத்துக்குடியில் வைரலானது. இந்த ஆபரேஷக்கு இடையிலும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த பைக்கின் பதிவெண் மூலம் பிறந்தநாள் கொண்டாடிய கலைச்செல்வனை ஓட்டப்பிடாரம் போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 4 அரிவாள்களும் பறிமுதல் செய்யப்ப்பட்டது. இந்த நிலையில், கையில் அரிவாள், கத்தியுடன் போஸ் கொடுத்து, அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார் ஓர் இளைஞர். வைரலாகி வந்த அந்தப் படங்கள் போலீஸாரை எரிச்சல் அடையச் செய்தது.

வேலூர்: காரில் துப்பாக்கி, கத்தி, வாள்... முதல்வர் கூட்டத்துக்குச் செல்லும் திட்டமா? - நடந்தது என்ன?
காவல் நிலையத்தில் அமச்சார்
காவல் நிலையத்தில் அமச்சார்

மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் அந்தப் புகைப்படங்களில் உள்ள இளைஞரைத் தேடிக் கண்டிபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தில் அரிவாளுடன் போஸ் கொடுத்தவர், ஸ்ரீவைகுண்டம், வடக்கு முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 26 வயதான அமச்சார் என்பது தெரியவந்தது. இதையடுத்து பத்மநாபமங்கலம் மறுகால்மடைப் பகுதியில் வைத்து அமச்சாரை ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் லெட்சுமி பிரபா தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரது சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தியைப் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக ஒருவரை கொலை செய்வதற்காக சென்றதும், அதற்காக அந்த அரிவாளை மறைத்து எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. ”கடந்த 23 மற்றும் 24-ம் தேதி நடத்திய அதிரடிச் சோதனையில் 75 ரவுடிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 53 அரிவாள், வாள் போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கத்தி, வாளுடன் போஸ் கொடுத்த அமச்சார்
கத்தி, வாளுடன் போஸ் கொடுத்த அமச்சார்

இந்த ஆண்டு இதுவரை 138 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், ரவுடித்தனம் செய்பவர்கள், அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித்திரிபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள்” ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு