Published:Updated:

பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய ரூ.11 லட்சம் சுருட்டல்; பெண் உதவி கணக்காளர் கைது!

உதவி கணக்காளர் கைது

பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய பணத்தை ஏமாற்றி மோசடி செய்த பெண் உதவி கணக்காளரை போலீஸார் கைதுசெய்தனர்.

பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய ரூ.11 லட்சம் சுருட்டல்; பெண் உதவி கணக்காளர் கைது!

பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய பணத்தை ஏமாற்றி மோசடி செய்த பெண் உதவி கணக்காளரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
உதவி கணக்காளர் கைது

புதுக்கோட்டை, மேல மூன்றாம் வீதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி சுகன்யா (34). இவர் நச்சாந்துபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி கணக்காளராகப் பணிபுரிந்துவருகிறார்.

இவர், கடந்த ஒன்றரை மாதங்களாக ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வராமல் அடிக்கடி விடுப்பு எடுத்திருக்கிறார். இதற்கிடையே, தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு, கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வரவில்லை. இது குறித்து அவர்கள் வட்டார மருத்துவ அலுவலர் மனோஜிடம் புகாரளித்திருக்கின்றனர். இது குறித்து மனோஜ், சம்பந்தப்பட்ட உதவி கணக்காளரிடம் கேட்டபோது, அதற்கு மழுப்பலாக பதில் கூறியிருக்கிறார்.

இதையடுத்து சந்தேகமடைந்த மருத்துவ அலுவலர் மனோஜ், சுகன்யாவின் வங்கிக் கணக்கை ஆய்வுசெய்து பார்த்தபோது, அதிர்ச்சியடைந்தார். ஆரம்ப சுகாதார நிலைய வங்கிக் கணக்கிலிருந்து உதவி கணக்காளர் சுகன்யாவின் வங்கிக் கணக்குக்குப் பணம் மாற்றப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

சுகன்யா
சுகன்யா

அதையடுத்து, வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ் அந்த ஆதாரங்களுடன் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 409, 419, 420 உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, சுகன்யாவைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.‌

விசாரணையில், சுகன்யா கடந்த ஆறு மாத காலமாக அந்த சுகாதார நிலையத்துக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் வந்த பணம் மற்றும் கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின்கீழ் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய சம்பளத் தொகை என மொத்தம் 11,31,909 ரூபாயை நச்சாந்துபட்டி வட்டார மருத்துவ அலுவலராக இருக்கும் மருத்துவர் மனோஜின் கையொப்பத்தை போலியாகப் பதிவிட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது.

கைது
கைது

வட்டார அலுவலக கனரா வங்கிக் கணக்கிலிருந்து, உதவி கணக்காளர் சுகன்யா கணக்கு வைத்திருக்கும் பனையப்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கணக்குக்கு மாற்றி கடந்த ஆறு மாத காலமாக இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டுவந்தது தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக கைதாகியிருக்கும் சுகன்யாவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.