Published:Updated:

சென்னை: நடுரோட்டில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை, கொலை மிரட்டல்... முதியவர் சிக்கியது எப்படி?!

கைது ( சித்திரிப்புப் படம் )

சென்னையில் நடுரோட்டில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் முதியவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை: நடுரோட்டில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை, கொலை மிரட்டல்... முதியவர் சிக்கியது எப்படி?!

சென்னையில் நடுரோட்டில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் முதியவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
கைது ( சித்திரிப்புப் படம் )

சென்னை, அயனாவரம் பகுதியிலுள்ள கோயில் ஒன்றில் தங்கி, அந்தப் பகுதியில் கீதா (57) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்பவர் பூ வியாபாரம் செய்துவருகிறார். இவர் கடந்த 3-ம் தேதி டி.பி.சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் கிழக்கு புது மண்டபம் ரோட்டில் நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த முதியவர், கீதாவிடம் பேசியிருக்கிறார். அப்போது திடீரென கீதாவுக்கு அந்த முதியவர் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதற்கு கீதா எதிர்ப்பு தெரிவித்ததால் முதியவர் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். பின்னர் ஆத்திரமடைந்த முதியவர், கீதாவைக் கல்லால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதில் கீதாவுக்குத் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்திருக்கிறது.

கைது
கைது

கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பிறகு கீதா டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கீதாவுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது அண்ணாநகர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த கரிகாலன் (62) எனத் தெரியவந்தது. இதையடுத்து கரிகாலனை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்துப் பேசிய போலீஸார், ``கீதா அளித்த தகவலின்படி அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வுசெய்தோம். அதில் பதிவான உருவத்தின் அடிப்படையில் கரிகாலனைக் கைதுசெய்திருக்கிறோம்" என்றனர்.