Published:Updated:

`நான்தாண்டா ராமு!' - 20 ஆண்டுகளுக்குப்பிறகு வாயால் சிக்கிய சென்னை மெக்கானிக்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நீண்டகாலமாக கிடப்பில் கிடந்த கொலை முயற்சி வழக்கை கையில் எடுத்த இன்ஸ்பெக்டர் முருகன், துரிதமாக துப்பு துலக்கி 20 ஆண்டுகளாக தேடப்பட்ட மெக்கானிக் ராமுவை கைது செய்துள்ளார்.

மெக்கானிக் ராமு
மெக்கானிக் ராமு

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கடந்த 1999-ம் ஆண்டு நடந்த சம்பவம் இது. சென்னை சிங்கண்ணசெட்டித் தெருவில் மெக்கானிக் கடை நடத்திவந்தவர் முருகன். இவரின் கடையில் மணிகண்டன், ராமு, விஜி, ஆரோக்கியதாஸ் ஆகியோர் வேலை பார்த்தனர். 1999-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முருகனுக்குத் திருமணம். முதலாளிக்கு திருமணம் என்பதால் அவரின் கடையில் வேலைபார்த்த மணிகண்டன், ராமு, விஜி, ஆரோக்கியதாஸ் ஆகிய 4 பேரும் மதுஅருந்தினர். போதை தலைக்கெறியதும் நான்கு பேரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்தனர்.

representational image
representational image

ஒருகட்டத்தில் மணிகண்டனை மற்ற மூன்று பேரும் சேர்ந்து கிண்டல் செய்துள்ளனர். அப்போது மணிகண்டன், தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜி, ஆரோக்கியதாஸ், ராமு ஆகிய 3 பேரும் மணிகண்டனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர். இதையடுத்து, மற்ற மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன், உயிர் பிழைத்துக்கொண்டார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், விஜி, ஆரோக்கியதாஸ் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், மெக்கானிக் ராமு மட்டும் போலீஸாரிடம் சிக்கவில்லை.

20 ஆண்டுகளாக ராமுவை போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக முருகேசன் வந்தார். அவர் கிடப்பில் உள்ள வழக்குகள் குறித்து விசாரித்தார். அப்போது 20 ஆண்டுகளாக கொலை முயற்சி வழக்கில் ராமுவை தேடுவதாக போலீஸார் கூறினர். இதையடுத்து, மணிகண்டன் கொலை முயற்சி வழக்கை இன்ஸ்பெக்டர் முருகேசன் தூசி தட்டி கையில் எடுத்தார். புகார் கொடுத்த மணிகண்டன் குறித்தும் ராமு குறித்தும் விசாரித்தார்.

மணிகண்டன், உயிர் பிழைத்துக்கொண்டார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், விஜி, ஆரோக்கியதாஸ் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், ராமு மட்டும் போலீஸாரிடம் சிக்கவில்லை.

மணிகண்டனின் சகோதரர்கள் சென்னை ஜாபர்கான்பேட்டையில் கடை வைத்திருக்கும் தகவல் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்குக் கிடைத்தது. உடனே அங்கு சென்று மணிகண்டனின் செல்போன் நம்பரை வாங்கினார். பிறகு மணிகண்டனிடம் ராமு குறித்து ஏதாவது தகவல் கிடைக்குமா என கேட்டார். அப்போது இந்தச் சம்பவத்துக்குப்பிறகு சிந்தாதிரிப்பேட்டை பகுதிக்கே நான் வருவதில்லை என்று மணிகண்டன் கூறினார். ராமுவை தேடும் முயற்சி ஆரம்பத்திலேயே தோல்வியடைந்தாலும் போலீஸார் மனம் தளரவில்லை.

`வழக்கு முடியும் வரையில் அங்கேயே இருங்கள்!' -வேலூருக்கு வந்த மேலவளவு குற்றவாளிகள்

சிந்தாதிரிப்பேட்டையில் ராமு பணியாற்றிய காலகட்டத்தில் அவருடன் பழகியவர்களின் விவரங்களை போலீஸார் சேகரித்தனர். அப்போது ராமு, தி.நகர் கடையில் வேலைபார்க்கும் தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீஸார் ராமு குறித்து விசாரித்தனர். அப்போது அந்தக் கடையில் உள்ளவர்கள் ராமு இங்குதான் வேலை பார்த்தார். ஆனால், தற்போது அவர் இங்கு வேலை பார்க்கவரவில்லை என்று கூறினர். இந்த முயற்சியும் தோல்வியடைந்தது.

ராமுவை தேடும் முயற்சி ஆரம்பத்திலேயே தோல்வியடைந்தாலும் போலீஸார் மனம் தளரவில்லை.

பின்னர், மீண்டும் ராமு குறித்த விசாரணையில் களமிறங்கினர் போலீஸார். அப்போது ராமுவின் சகோதரர் ஹரி என்பவர் சமீபத்தில் இறந்த தகவல் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு கிடைத்தது. உடனே போலீஸார் ஹரி இறப்பை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ராமுவைப் பிடிக்க முடிவு செய்தனர். போலீஸார் விரித்த வலையில் ராமு தானாக வந்து சிக்கிக்கொண்டார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு ராமுவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் முருகேசன் கூறுகையில், ``கடந்த 1999-ம் ஆண்டு நடந்த மணிகண்டன் கொலை முயற்சி வழக்கில் 20 ஆண்டுகளாக மெக்கானிக் ராமு என்பவரை போலீஸார் தேடி வந்தனர். இந்தத் தகவல் கிடைத்ததும் ராமு குறித்த விவரங்களைச் சேகரித்தோம். அதோடு புகார் கொடுத்த மணிகண்டனைக் கண்டுபிடித்து அவரிடம் விசாரித்தோம். தற்போது மணிகண்டன் ஆட்டோ ஓட்டி வருகிறார். அவருக்கு ராமு குறித்த எந்தவிவரமும் தெரியவில்லை.

இன்ஸ்பெக்டர் முருகேசன்
இன்ஸ்பெக்டர் முருகேசன்
ராமுவின் சகோதரர் ஹரி என்பவர் சமீபத்தில் இறந்த தகவல் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு கிடைத்தது. உடனே போலீஸார் ஹரி இறப்பை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ராமுவைப் பிடிக்க முடிவு செய்தனர்.

சிந்தாதிரிப்பேட்டையில் ராமுவுடன் பழகியவர்களிடம் விசாரித்தோம். அப்போது தி.நகர் பகுதியில் உள்ள கடையில் ராமு வேலை பார்க்கும் தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்று விசாரித்தோம். ஆனால் அங்கு, ராமு வேலையிலிருந்து நின்றுவிட்டதாகக் கூறினார். இந்த முயற்சியும் தோல்வியடைந்தது. இதையடுத்து, மீண்டும் ராமுவைத் தேடினோம். அப்போது ராமுவின் சகோதரர் ஹரி என்பவர் இறந்த தகவல் கிடைத்தது.

உடனே ஹரியின் மரணத்தைப் பயன்படுத்தி ராமுவைப் பிடிக்க வியூகம் அமைத்தோம். ஹரிக்கு இன்ஷூரன்ஸ் பணம் வந்துள்ளது. அதை அவரின் மனைவியிடம் கொடுக்க வேண்டும் என்று ராமுவுக்கு தெரிந்தவர்களுக்கு தகவலை தெரிவித்தோம். அப்போது ராமுவின் நண்பர் ஒருவர், ஹரியின் மனைவி குறித்த தகவலைக் கூறியதோடு ஹரியின் சகோதரர்கள் ராமுவும் ஆறுமுகமும் வறுமையில் உள்ளனர். அதனால் இன்ஷூரன்ஸ் பணத்தை அவர்களிடம் கொடுங்கள் என்று கூறினார்.

குமரி மாவட்டம், கருங்கல் காவல் நிலையத்தில் நான் பணியாற்றியபோது கொலை வழக்கு எண் 48/88ல் 20 ஆண்டுகளாக ஒருவரை போலீஸார் தேடிவந்தனர். கேரளாவில் செட்டிலான அவரைக் கைது செய்துள்ளேன். அந்த வழக்கில் அவருக்கு 6 ஆண்டுகள் தண்டனை கிடைத்தது
இன்ஸ்பெக்டர் முருகேசன்

இதனால் அந்த நபருக்கு சந்தேகம் வராத வகையில் இருவரின் முகவரி, செல்போன் நம்பரை வாங்கினோம். உடனே இருவரின் விவரங்களையும் அவர் கொடுத்தார். தொடர்ந்து, ராமுவின் முகவரியான பள்ளிக்கரணைக்குச் சென்றோம். அப்போது அந்தப்பகுதியில் பொது இடத்தில் வைத்து ஒருவர் மது அருந்திக்கொண்டிருந்தார். அவரை போலீஸார் கண்டித்தனர். உடனே அவர் போதையில் திட்டினார். ஆனால், நாங்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.

ராமுவின் வீட்டின் கதவைத் தட்டினோம். அப்போது மது அருந்திக் கொண்டிருந்தவர், எதற்கு வீட்டு கதவைத் தட்டுகிறீர்கள் என்று கேட்டார். உடனே ராமு எங்கே என்று கேட்டோம். உடனே அவர், `நான்தாண்டா ராமு' என்று கூறினார். உடனே அவரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தோம். அவரிடம் விசாரித்தபோது, `மணிகண்டனை போதையில் நண்பர்களுடன் அடித்தேன். ஆனால், நல்லவேளை மணிகண்டன் இறக்கவில்லை. இந்தச் சம்பவத்துக்குப்பிறகு சிந்தாதிரிப்பேட்டை பக்கமே வரவில்லை. பல இடங்களில் தங்கியிருந்தேன். மெக்கானிக் வேலையை மறந்துவிட்டு சோபாக்களுக்கு மெத்தை தயாரிக்கும் வேலை செய்துவருகிறேன். மணிகண்டன் வழக்கு குறித்த விவரங்களை அவ்வப்போது கேட்டறிந்துகொண்டேன்.

`அமெரிக்காவிலிருந்து மூதாட்டி அனுப்பிய புகார்!' -சென்னை திரும்புவதற்குள் திருடனைப் பிடித்த போலீஸ்

20 ஆண்டுகள் கடந்தபிறகு என்னை போலீஸார் கண்டுபிடிக்க முடியாது என்று தைரியமாக இருந்தேன். ஆனால், என் வாயால் சிக்கிக்கொண்டேன்' என்றார். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ராமு என்கிற ராமலிங்கத்தை (42) சிறையில் அடைத்துள்ளோம்'' என்று இன்ஸ்பெக்டர் முருகேசன் கூறினார். இதுபோல நீண்டகாலமாக தேடப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்துள்ளீர்களா என்று இன்ஸ்பெக்டரிடம் கேட்டதற்கு, ``குமரி மாவட்டம், கருங்கல் காவல் நிலையத்தில் நான் பணியாற்றியபோது கொலை வழக்கு எண் 48/88-ல் 20 ஆண்டுகளாக ஒருவரை போலீஸார் தேடிவந்தனர். கேரளாவில் செட்டிலான அவரைக் கைது செய்துள்ளேன். அந்த வழக்கில் அவருக்கு 6 ஆண்டுகள் தண்டனை கிடைத்தது" என்றார்.

மணிகண்டனின் வலது கையில் விழுந்த அரிவாள் வெட்டு காரணமாக இன்றுவரை அவரால் அந்தக் கையைப் பயன்படுத்தி சாப்பிட முடியவில்லை என்கின்றனர் போலீஸார்.