Published:Updated:

`முகநூல் பழக்கம்.. திடீர் தற்கொலை?!’ -டி.எஸ்.பி என ஆண் குரலில் பேசிய பெண்; சிக்கிய மோசடி தம்பதி

டி.எஸ்.பியாக ஆண் குரலில் பேசிய ஜனனி
டி.எஸ்.பியாக ஆண் குரலில் பேசிய ஜனனி

கணவன் மனைவி இருவரும் போலீஸ் போல் நடித்து பணம் பறிக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அந்த தம்பதியை கைது செய்து போலீஸ் சிறையில் அடைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கும்பகோணம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரிடம் தூத்துக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் தான் டி.எஸ்.பி என ஆண் குரலில் பேசி தனது கணவரை போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்க வைத்து பணம் பறிக்க முயன்றுள்ளனர். பச்சை கிளி முத்துச்சரம் படத்தில் வருவது போல் நெருக்கமாக பேசி ஏமாற்ற நினைத்த தம்பதியை போலீஸ் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கணவர்
கைது செய்யப்பட்ட கணவர்

திருவாரூர் மாவட்டம் கண்டியூரைச் சேர்ந்தவர் சரவண பார்த்திபன்(51). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவரின் மனைவியான ஜனனி(25) என்ற பெண்ணுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், ஜனனி தனக்கு திருமணமான விஷயத்தை மறைத்து, சரவண பார்த்திபனிடம் பழகி வந்துள்ளார்.

இரண்டு பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் பேசி வந்துள்ளனர். இருவருக்கும் நெருக்கம் அதிகரித்ததை பயன்படுத்தி கொண்ட ஜனனி, தனக்கு பெரிய பிரச்னைகள் இருக்கிறது. கடனும் உள்ளது அதிலிருந்து மீள வேண்டும். இல்லை என்றால் எனக்கு சிக்கலாகி விடும் என சரவண பார்த்திபனிடம் உருக்கமாக கூறி ரூ.7 லட்சம் கேட்டுள்ளார் அவரும் அதனை உண்மை என நம்பி பணம் கொடுத்துள்ளார்.

திருமணம் செய்வதாகக் கூறி ரூ.7 கோடி மோசடி! - முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் மருமகன்மீது வழக்கு பதிவு

`கேட்டதுமே ரூ.7 லட்சம் கொடுத்துட்டாரே. இவரை வைத்து இன்னும் பணம் பறிக்கலாம்’ என திட்டமிட தொடங்கினார் ஜனனி. சொல்லப் போனால் சரத்குமார் - ஜோதிகா நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் வருவது போல் ஜனனியும், அவரது கணவர் பார்த்திபனும் சேர்ந்து சரவண பார்த்திபனிடம் பணத்தை கறக்க முடிவு செய்தனர். பின்னர் ஜனனி, முகநூலில் ரம்யா என்ற பெயரில் போலியாக புது ஐ.டியை உருவாக்கி அதில் சரவண பார்த்திபனை நண்பராக்கி, அதன் மூலம் பேசத் தொடங்கியுள்ளார். சரவண பார்த்திபன், ஜனனி தான் ரம்யா என்ற பெயரில் பழகுகிறார் என தெரியாமல் புதிய தோழியான ரம்யாவிடம் பேசி வந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், கடந்த 28-ம் தேதி, சரவண பார்த்திபனுக்கு, போன் ஒன்று வந்துள்ளது. அதில், தூத்துக்குடி நகர போலீஸ் டிஎஸ்பி பேசுறேன், `நீங்கள் பேஸ்புக்கில் பழகிய ரம்யா என்ற பெண் தற்கொலை செய்துக்கொண்டு விட்டார். அவர் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதத்தில், தன் சாவுக்கு நீங்க தான் காரணம்’ என உங்கள் பெயரை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக உங்களை விசாரிக்க வேண்டும், என ஜனனியே செல் போனில் குரல் மாற்றி பேசும் செயலியை பயன்படுத்தி ஆண் குரலில் சரவண பார்த்திபனிடம் பேசியிருக்கிறார்.

மோசடி
மோசடி

இதில் பயந்து போன சரவண பார்த்திபன் செய்வதறியாது விழித்துள்ளார். இது வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடும் எனவும் கருதியுள்ளார். இந்த சூழ்நிலையில் இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும். என ஜனனி கேட்டதற்கும் ஒப்பு கொண்டுள்ளார். இதையடுத்து பணத்தை வாங்குவதற்காக ஜனனி, தனது கணவர் பார்த்திபனை இன்ஸ்பெக்டராக நடிக்க வைத்து கும்பகோணத்துக்கு அனுப்பி வைத்தார்.

கடந்த 29-ம் தேதி கும்பகோணம் வந்த பார்த்திபன், தன்னை இன்ஸ்பெக்டர் என சரவணபார்த்திபனிடம் அறிமுகம் செய்துக் கொண்டு, ரூ.10 லட்சம் கேட்டுள்ளார். இதையடுத்து சரவண பார்த்திபன், தற்போது அவ்வளவு பணம் இல்லை என கூறி கையில் இருந்த ரூ 63,000 கொடுத்து, ``மீதி பணத்தை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன். வந்ததும் கொடுத்து விடுகிறேன் அது வரை வெயிட் பண்ணுங்க” என கூறி கும்பகோணத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தன் பெயரிலேயே ரூம் எடுத்து தங்க வைத்துள்ளார்.

15 வருடங்களுக்கு முன்பே மோசடி மன்னர்களாக வலம்வந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ்; பெற்றோர் கைது!-நடந்தது என்ன?

தனக்கு நடந்ததை வெளியே சொல்லவும் முடியவில்லை, கேட்ட இடத்தில் பணமும் கிடைக்கவில்லை என்ற நிலையில் இது குறித்து சரவண பார்த்திபன், தனது நண்பர்களிடம் கூறி புலம்பியிருக்கிறார். சரவண பார்த்திபன் நிலையை புரிந்துக்கொண்ட அவரது நண்பர்களான குடவாசல் குருசாமி (50), தஞ்சாவூர் நடராஜன்(52) ஆகியோர், பார்த்திபன் தங்கியிருந்த லாட்ஜூக்கு சென்று விசாரித்துள்ளனர்.

பார்த்திபனின் நடவடிக்கை இன்ஸ்பெக்டர் போல் இல்லாமல் இருந்ததையடுத்து சந்தேகமடைந்த அவர்கள் தங்கள் பாணியில் விசாரித்துள்ளனர். அப்போது பார்த்திபன் தான் இன்ஸ்பெக்டர் இல்லை என்பதையும், தன் மனைவியான ஜனனியே டி.எஸ்.பி யாக ஆண் குரலில் பேசியதாகவும் கூறியிருக்கிறார். கணவன் மனைவி இருவரும் போலீஸ் போல் நடித்து பணம் பறிக்க முயன்றது தெரிய வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், சரவண பார்த்திபன் நண்பர்கள், ஜனனிக்கு போன் செய்து, ``நீ ஏமாற்றி வாங்கிய ரூ.7 லட்சத்தை எடுத்துக் கொண்டு கும்பகோணம் வந்தால் தான் உன் கணவரை விடுவோம்” என மிரட்டியுள்ளனர்.

போலீஸ் போல் பேசி ஏமாற்றிய ஜனனி
போலீஸ் போல் பேசி ஏமாற்றிய ஜனனி

தான் ஏமாற்றியதை கண்டுபிடித்து விட்டார்கள் நாம் அங்கு சென்றால் சிக்கல் தான் என்பதை உணர்ந்த ஜனனி துாத்துக்குடி போலீஸில் புகார் அளித்து விட்டு, 30-ம் தேதி கும்பகோணம் வந்தார். தொடர்ந்து, கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில், கணவனை மீட்டு தர கோரி புகார் அளித்தார். அப்போது, போலீஸார் சரவண பார்த்திபன் அவரது நண்பர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

தஞ்சாவூர்: கலெக்டர் பெயரில் புது டெக்னிக்; நோ ரிஸ்க்! -பணம் பறிக்கும் மோசடி தம்பதி சிக்கியது எப்படி?

இதில் ஜனனியும் அவரது கணவரும் சேர்ந்து போலீஸ் போல் பேசி ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றி சரவண பார்த்திபனிடம் பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, சரவண பார்த்திபன் கொடுத்த புகாரின் பெயரில், ஜனனி, அவரின் கணவர் பார்த்திபன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம், சினிமாவில் வருவது போல் தம்பதியினர் சேர்ந்து சரவண பார்ப்பனிடன் பணம் பறிக்க முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு