Published:Updated:

விலையுயர்ந்த சைக்கிள்கள்தான் டார்கெட்; 41 HighEnd சைக்கிள்களை திருடிய பலே ஆசாமி சிக்கியதன் பின்னணி!

திருடப்பட்ட சைக்கிள்கள்

விலையுயர்ந்த சைக்கிள்களை குறிவைத்து திருடிவந்த நபரை போலீஸார் கைதுசெய்தனர்.

விலையுயர்ந்த சைக்கிள்கள்தான் டார்கெட்; 41 HighEnd சைக்கிள்களை திருடிய பலே ஆசாமி சிக்கியதன் பின்னணி!

விலையுயர்ந்த சைக்கிள்களை குறிவைத்து திருடிவந்த நபரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
திருடப்பட்ட சைக்கிள்கள்

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அசோக் நகர் காவல் நிலையத்தில் தன்னுடைய 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சைக்கிளை யாரோ திருடி விட்டார்கள் என்று புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். அப்போதுதான் சென்னையில் விலை உயர்ந்த சைக்கிள்கள் மட்டும் அதிக அளவில் திருட்டுப் போன தகவல்கள் போலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து சைக்கிள்கள் திருடப்பட்ட இடங்களில் உள்ள சி.சி.டி.வி கேமராப் பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது ஒரே நபர் தொடர்ச்சியாக சைக்கிள்களை திருடிவந்தது தெரியவந்தது.

பறிமுத்ல் செய்யப்பட்ட சைக்கிள்கள்
பறிமுத்ல் செய்யப்பட்ட சைக்கிள்கள்

பின்னர் அவர் யாரென்று போலீஸார் விசாரித்தனர். அப்போது கே.கே.நகர் காவல் நிலையத்தில் கடந்த 2014-ம் ஆண்டு சைக்கிள் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்ற வெங்கடேஷின் உருவமும், சி.சி.டி-வியில் பதிவானவரின் உருவமும் ஒத்துப்போனது. அதனால் வெங்கடேஷிடம் விசாரித்தபோது அவர்தான் சைக்கிள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கைதான வெங்கடேஷ், குடும்பத்தோடு கடம்பூரில் வசித்து வருகிறார். அதனால் ரயில், பேருந்து மூலம் சென்னைக்கு வரும் அவர், விலை உயர்ந்த சைக்கிள்களை நோட்டமிடுவார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத பகல், இரவு நேரங்களில் சைக்கிளைத் திருடிக் கொண்டு வெங்கடேஷ் தப்பிச் சென்றுவிடுவார். பைக்குகளைத் திருடினால் அதை விற்க ஆர்.சி புக் உள்ளிட்ட சில சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால் சைக்கிள்களைத் திருடி விற்பது ஈஸி. அதனால்தான் விலை உயர்ந்த சைக்கிள்களை மட்டும் திருடி விற்று வந்திருக்கிறார் வெங்கடேஷ். திருடிய சைக்கிள்களை குறைந்த விலைக்கு வெங்கடேஷ் சிலரிடம் விற்றிருக்கிறார்.

வெங்கடேஷ்
வெங்கடேஷ்

குறிப்பாக 20,000 ரூபாய் விலை கொண்ட சைக்கிள்களை வெறும் இரண்டாயிரத்துக்கும் விற்றிருக்கிறார். அந்தப் பணத்தில் மது அருந்தும் வெங்கடேஷ், அன்றைய தினத்தை சந்தோஷமாக கழித்து வந்திருக்கிறார். மேலும், பட்டதாரியான வெங்கடேஷ், படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் சைக்கிள் திருடனாக மாறியதாக விசாரணையின்போது எங்களிடம் தெரிவித்தார். தன்னுடைய செலவு போக மீதியிருக்கும் பணத்தை குடும்ப செலவுக்கும் குழந்தைகளின் ஃபீஸ் செலவுக்கும் கொடுத்ததாக வெங்கடேஷ் தெரிவித்தார். கைதான வெங்கடேஷிடமிருந்து 41 சைக்கிளைப் பறிமுதல் செய்திருக்கிறோம். நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.