Published:Updated:

நெல்லை: மது போதை... பணம் கேட்டுத் தகராறு; கொலையில் முடிந்த தந்தை மகன் வாக்குவாதம்!

கொலை
News
கொலை

கையில் பணமில்லாததால் போதைப்பொருள் வாங்குவதற்குத் தந்தையிடம் பணம் கேட்டு நச்சரித்து வந்திருக்கிறார். அதனால் தந்தை, மகன் இடையே பிரச்னை நிலவி வந்திருக்கிறது.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆமின்புரத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவர் மகன் அப்துல் ரகுமான் (27) தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இவர் கடந்த சில வருடங்களாக மது, கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வீட்டில் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்துலுக்கு வீட்டுக்கே காரில் வந்து சிலர் அவருக்குக் கஞ்சா விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மது போதை காரணமாக தகராறு செய்ததால் கொலையான மகன்
மது போதை காரணமாக தகராறு செய்ததால் கொலையான மகன்

அதனால் அப்துல் ரகுமான் போதைக்கு அடிமையாகி வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்திருக்கிறார். கையில் பணமில்லாததால் போதைப்பொருள் வாங்குவதற்குத் தந்தையிடம் பணம் கேட்டு நச்சரித்து வந்திருக்கிறார். அதனால் தந்தை, மகன் இடையே பிரச்னை நிலவி வந்திருக்கிறது. திருமணமானால் மகன் திருந்துவான் என நினைத்து அவர் தந்தையும் அவருக்கு மணம் முடித்து வைத்துள்ளார். ஒரு குழந்தை பிறந்ததும் அப்துல் ரகுமான் தன் மனைவியை அடித்து சொந்த வீட்டுக்கு விரட்டி அனுப்பி விட்டதாகச் சொல்லப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தன் மகனின் நிலையை நினைத்து வருத்தம் அடைந்த அப்துல்லா, மகனுக்குப் புத்திமதி சொல்லித் திருத்துவதற்கு முயன்றுள்ளார். ஆனால் அப்துல் ரகுமான், தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்திருக்கிறார். இந்த நிலையில், வழக்கம் போலவே இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், ஆத்திரம் அடைந்த அப்துல்லா, மகன் அப்துல் ரகுமான் மீது அம்மிக் கல்லைத் தூக்கி வீசியுள்ளார்.

மகனை கொலை செய்த அப்துல்லாவிடம் விசாரணை
மகனை கொலை செய்த அப்துல்லாவிடம் விசாரணை

அப்துல் ரகுமான் தலையில் பட்ட கல், அவர் தலையைச் சிதைத்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த அப்துல்லா செய்வதறியாமல் திகைத்துள்ளார். பின்னர் மேலப்பாளையம் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்ட அவர், தன் மகனைக் கொலை செய்தது பற்றித் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற மேலப்பாளையம் காவல்துறையினர், அப்துல் ரகுமான் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகனை கொலை செய்த அப்துல்லாவை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.

கொலையான அப்துல் ரகுமான்
கொலையான அப்துல் ரகுமான்

தன் மகன் குடித்து விட்டு வந்து தகராறு செய்ததால் ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டதாக போலீஸாரிடம் அப்துல்லா தெரிவித்துள்ளார். மது போதை காரணமாகத் தகராறு செய்த மகனை ஆத்திரத்தில் கொலை செய்த தந்தையின் செயல் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.