Published:Updated:

வருமானவரித்துறை அதிகாரிபோல் வேடமிட்டு கொள்ளை...சிக்கிய முன்னாள் தலைமைக் காவலர்! #TamilnaduCrimeDiary

#TamilnaduCrimeDiary
#TamilnaduCrimeDiary

தங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் எனக் கூறிய மூன்று நபர்கள், சரக்கு வாகனத்தை நிறுத்தி 8 லட்சம் ரூபாய் பணம் பறிக்க முயன்ற சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TamilnaduCrimeDiary

பெங்களூரில் இருந்து தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு சரக்கு வாகனத்தில் வெள்ளைப்பூண்டு மூட்டைகளை ஓட்டுநர் செல்வம் ஏற்றிவந்துள்ளார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். பெரியகுளத்தில் வெள்ளைப்பூண்டு மூட்டைகளை இறக்கிவிட்டு 8, 50,000 ரூபாய் பணத்துடன், சரக்கு வாகனத்தில் ஏறி பெங்களூரு கிளம்பியுள்ளார். இதையறிந்த மூன்று பேர், இருசக்கர வாகனத்தில் அவரைப் பின் தொடர்ந்துவந்து, எண்டப்புளி என்ற இடத்தில் சரக்கு வாகனத்தை நிறுத்தியுள்ளனர். தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி, சரக்கு வாகனத்தைச் சோதனை செய்துள்ளனர்.

ஓட்டுனர் செல்வம்
ஓட்டுனர் செல்வம்

தான் டிரைவர் என்றும் தனது முதலாளியிடம் பேசும்படியும் செல்வம் கூறியுள்ளார். அதைக் கண்டுகொள்ளாத மூவரும், எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய் எனக் கேட்டுள்ளனர். தொடர்ந்து, செல்வத்திடம் இருந்த 8,50,000 ரூபாய் பணத்தைப் பறிக்க முயன்றுள்ளனர். மூவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே, தன்னைக் காப்பாற்றுமாறு செல்வம் சத்தம் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் ஓடிவரவும் மூவரும் கையும் களவுமாக சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து வந்த பெரியகுளம் வடகரை காவல்துறையினர், மூவரையும் கைது செய்து விசாரித்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

`ஏ' கிளாஸ் நோய், தெர்மல் ஸ்கேனர்கள், சுற்றுலாவுக்குத் தடை... என்ன நடக்கிறது சீனாவில்?

பிடிபட்ட மூவரில் மூளையாக செயல்பட்டது, இதே பெரியகுளத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி ஓய்வுபெற்ற கிருஷ்ணன். 10 வருடத்துக்கு முன்னர் காவல்துறையிலிருந்து ஓய்வுபெற்ற இவர், இதுபோன்ற வழிப்பறிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. அவருக்கு உதவிய அருண்குமார் மற்றும் வேல்மணி ஆகியோரிடம் விசாரணை செய்த போலீஸார், மூவரையும் கைது செய்தனர். முன்னாள் தலைமைக் காவலரே வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பெரியகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட முன்னாள் காவலர் கிருஷ்ணன் தலைமையிலான கும்பல்
கைது செய்யப்பட்ட முன்னாள் காவலர் கிருஷ்ணன் தலைமையிலான கும்பல்
அலர்ட்!
தடைசெய்யப்பட்ட புகையிலை சிவகங்கையில் அமோக விற்பனை

சிவகங்கை மாவட்ட கிராமப்புறங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருவதால், விதிகளை மீறி விற்பனை செய்யும் மொத்த விற்பனையாளர்களையும் சில்லறை வியாபாரிகள் மீதும் நடவடிக்கைகள் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

உடல் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் புகையிலை மற்றும் குறிப்பிட்ட போதைப் பொருள்களை சேகரித்து வைக்கவும் விற்பனை செய்யவும் அரசு தடை செய்துள்ளது. இதில் குறிப்பாக புற்றுநோய்களை ஏற்படுத்தும் வகையில் வீரியம் கொண்ட குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருள்களும் அடக்கம். இந்த தடை, அமலுக்கு வந்த தொடக்கத்தில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் தடைசெய்யப்பட்ட புகையிலையின் விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக புகையிலைப் பொருள்களின் விற்பனையைத் தடுப்பதற்கான கண்காணிப்பு குறைந்துவிட்டதால், சிவகங்கை மாவட்டம் முழுவதும் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை கொடி கட்டிப் பறக்கிறது.

குட்கா, பான்மசாலா
குட்கா, பான்மசாலா

இதுகுறித்து காரைக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பெயர் குறிப்பிட வேண்டாமென்ற கோரிக்கையுடன் நம்மிடம் பேசினர். ``தடை செய்யப்பட்ட சுவைக்கும் புகையிலை அதிகளவு கிடைப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். திருப்பத்தூரில் ஆரம்பித்து, கல்லல், காரைக்குடி, ஒக்கூர், சிவகங்கை, மானாமதுரை வரையில் புகையிலை விற்பனை கனஜோராக நடக்கிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் புகையிலைப் பொருள்களை மிட்டாய் வாங்குவது போல வாங்கிச் செல்கின்றனர். இதனால் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படலாம். இதைச் சேகரித்து வைப்பவர்கள் மீதும் விற்பனை செய்பவர்கள் மீதும் உணவு பாதுகாப்புத் துறையும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு