Published:Updated:

தேனி: கர்ப்பமான சிறுமி; இளைஞர் மீது வீண்பழி - டி.என்.ஏ சோதனையில் சிக்கிய தந்தை!

கைதான அமாவாசை
News
கைதான அமாவாசை

உறவினரான வல்லரசுபாண்டிதான் சிறுமியின் கர்ப்பத்துக்குக் காரணம் எனக் கூறப்பட்டதால் வல்லரசுபாண்டி போக்சோ சட்டத்தின் கீழ் கைதானார். ஆனால், டி.என்.ஏ பரிசோதனையில் வல்லரசுபாண்டி குழந்தையின் தந்தை இல்லை என்பது உறுதியானது.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர் அமாவாசை (48). இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் ஆகியோர் இருக்கின்றனர். அமாவாசை தன்னை ஒரு சாமியார் என சொல்லிக்கொண்டு சுற்றித் திரிந்ததால் கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரின் மனைவி தன் பிள்ளைகளுடன் தனியே திண்டுக்கல்லில் வசித்துவந்தார்.

அமாவாசையின் மகளுக்கு 17 வயதே ஆகும் நிலையில், அவருக்கு கடந்த பிப்ரவரியில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. சிறுமிக்குக் குழந்தை பிறந்தது தொடர்பாக தேனி அனைத்து மகளிர் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த தன் உறவினரான வல்லரசுபாண்டி (22) தான் காரணம் எனச் சிறுமி கூறியிருக்கிறார். இதனால் வல்லரசுபாண்டி போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறுமி கர்ப்பம்
சிறுமி கர்ப்பம்

இதையடுத்து ஜாமீனில் வெளிவந்த வல்லரசுபாண்டி சிறுமிக்குப் பிறந்த குழந்தைக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என நீதிமன்றத்தில் முறையிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி டி.என்.ஏ பரிசோதனைக்கு உத்தரவிட்டார். அதில், வல்லரசுபாண்டி குழந்தையின் தந்தை இல்லை என்பது உறுதியானது. இதனால் போலீஸாருக்குக் குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொடர்ந்து சிறுமியின் தாயிடம் நடத்திய விசாரணையில் சிறுமி சில நாள்கள் தேவதானப்பட்டியிலுள்ள தந்தையிடம் தங்கியிருந்ததாகக் கூறியிருக்கிறார். இதையடுத்து போலீஸார் சிறுமியின் தந்தையிடம் விசாரணை நடத்தி அவரை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் தந்தையே மகளிடம் தவறாக நடந்துகொண்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் அமாவாசையைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

கைது
கைது

இது குறித்து தேவதானப்பட்டி போலீஸாரிடம் விசாரித்தோம். ``அமாவாசை கூலி வேலை செய்துகொண்டு பிழைப்பு நடத்திக்கொண்டிருந்திருக்கிறார். குடும்பத்தில் பிரச்னை என்பதால் மனைவி, குழந்தைகளைப் பிரிந்து வாழ்ந்துவந்திருக்கிறார். கடந்த ஆண்டு தந்தையைப் பார்க்க வந்த சிறுமி சில நாள்கள் தேவதானப்பட்டியில் தங்கியிருக்கிறார். அப்போதுதான் அமாவாசை தன் மகளிடம் தவறாக நடந்திருக்கிறார். அந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான், அமாவாசை தன்னைச் சாமியார் எனவும், நாட்டு வைத்தியர் எனவும் சொல்லிக்கொண்டு சுற்றித் திரிந்திருக்கிறார்'' என்றனர்.