Published:Updated:

மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற மகள் - என்ன நடந்தது?

பாலியல் வன்கொடுமை ( சித்தரிப்புப் படம் )

விருதுநகரில் மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற மகள் - என்ன நடந்தது?

விருதுநகரில் மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை ( சித்தரிப்புப் படம் )

விருதுநகர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் மூத்த மகள், அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவியின் புத்தகத்திலிருந்து கடிதம் ஒன்று கீழே விழுந்துள்ளது. அதை எடுத்து வகுப்பு ஆசிரியை வாசித்தபோது அதில், `இனியும் நான் வாழக்கூடாது' என எழுதியிருந்ததைக் கண்டு அவர் அதிர்ந்து போனார். உடனே சம்பந்தப்பட்ட மாணவியை தனியே அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் சென்றிருக்கிறார் அந்தப் பெண் ஆசிரியை.

இதுதொடர்பாக பள்ளித்தலைமை ஆசிரியை அந்த மாணவியிடம் விசாரித்ததில், பெற்ற மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்து வந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. உடனே இதுகுறித்து மாணவியின் தாயாருக்கு தகவல் தெரிவித்து, விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விருதுநகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அர்ச்சனா மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் ராஜசுலோச்சனா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவியின் தந்தையை கைது செய்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மாவட்ட காவல் அலுவலகம்
மாவட்ட காவல் அலுவலகம்

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில், "மாணவிகளின் தந்தை, தாய் 2 பேருமே வேலை செய்றாங்க. எனவே, பிள்ளைகளுக்குத் தேவையான சாப்பாடு, வீட்டு வேலை எல்லாத்தையும் முடிச்சிட்டு காலை 9 மணிக்கு மாணவியோட அம்மா வேலைக்கு போயிட்டு மதியம் 3 மணிக்கு சாப்பிட வீட்டுக்கு வர்றாங்க. இதனால காலையில பிள்ளைகள சாப்பிட வைச்சி பள்ளிக்கு அழைச்சிட்டு போய் விடுற வேலைய அப்பா தான் செஞ்சிருக்காரு. இந்த நிலையில, தைப்பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னாடி பொண்ணுக்கு ஸ்கூல் இல்லங்கறதால அவள வீட்ல விட்டுட்டு இவர் வேலைக்கு போயிருக்காரு. அன்னைக்கு திடீர்னு மதியம் 12 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்த அந்தப் பொண்ணோட அப்பா, கதவை தாழ்ப்பாள் போட்டுட்டு மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கார். அந்தப் பொண்ணு வலித்தாங்க முடியாம அழுதிருக்கு. அதுக்கு, கொஞ்ச நேரத்துல எல்லாம் சரியாகிடும்னு சொல்லிருக்காரு பொண்ணோட அப்பா. இதேமாதிரி, பலமுறை அந்தப்பொண்ணுக்கிட்ட அவர் தப்பா நடந்திருக்காரு. அதெல்லாம் வெளிப்படையா நாகரீகமான வார்த்தையால சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு மோசமா நடந்திருக்காரு. இந்தமாதிரி பாலியல் வன்கொடுமை நடந்ததை வெளியே யார்கிட்டயாவது சொன்னா, அம்மாவையும், வீட்ல இருக்குற மத்தவங்களையும் கொன்னுருவேன்னு அந்தப் பொண்ண மிரட்டிவச்சிருக்காரு.

அதனாலேயே, மூத்த பொண்ணு இதெல்லாம் சொல்லாம எல்லாத்தையும் மறைச்சிட்டு இருந்திருக்கா. கடந்த வாரம்கூட அந்தப் பொண்ணுக்கிட்ட பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுருக்கார். அதனால விரக்தியடைஞ்ச அந்தப் பொண்ணு, தற்கொலை கடிதம் எழுதி அத பாடப்புத்தக்கத்துக்குள்ள ஒளிச்சி வச்சிருக்கு. அதுதான், டீச்சர் கையில கிடைச்சி இன்னைக்கு அந்த விஷயம் வெளியத்தெரிஞ்சிருக்கு. அதுக்கு பிறகு அந்தப் பொண்ணோட ஸ்கூல் பேக்ல செக் பண்றப்போ அதுலேயேயும் இதேமாதிரியான இன்னொரு கடிதம் இருந்துச்சு. அதுலேயேயும், `இது எல்லாத்துக்கும் என் அப்பாதான் காரணம்'னு எழுதிருந்துச்சு. எல்லாத்தையும் கைப்பற்றி பைஃல் பண்ணிருக்கோம். பொண்ணோட அப்பாவ கைது பண்ணி கோர்ட்டுல ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைச்சிருக்கோம். பாதிக்கப்பட்ட பொண்ணு இப்போ ஹோம்ல பத்திரமா இருக்காங்க" என்று தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism