Published:Updated:

சென்னை: மீன் வாங்கச் சென்ற இடத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! - வியாபாரி உட்பட 4 பேர் கைது

மீன் வியாபாரி கோட்டை முனியசாமி

வில்லிவாக்கம் மீன் மார்க்கெட்டுக்கு கணவருடன் சென்ற பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசிய வியாபாரி உட்பட நான்கு பேரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை: மீன் வாங்கச் சென்ற இடத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! - வியாபாரி உட்பட 4 பேர் கைது

வில்லிவாக்கம் மீன் மார்க்கெட்டுக்கு கணவருடன் சென்ற பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசிய வியாபாரி உட்பட நான்கு பேரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

Published:Updated:
மீன் வியாபாரி கோட்டை முனியசாமி

சென்னை, அயனாவரம் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். வழக்கறிஞராக இருக்கிறார். இவரின் மனைவி சாந்தி. இவர்கள் இருவரும் வில்லிவாக்கம் மீன் மார்க்கெட்டுக்கு கடந்த 27-ம் தேதி சென்றனர். அப்போது விஜயகுமார், போனில் பேசிக்கொண்டிருந்தார். அதனால் சாந்தி மட்டும் உள்ளே சென்று கோட்டை முனியசாமி என்ற வியாபாரியிடம் மீன் வாங்கியிருக்கிறார்.

கண்ணன்
கண்ணன்

அப்போது மீன் வியாபாரி கோட்டை முனியசாமி, சாந்தியிடம் ``நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று விசாரித்திருக்கிறார். அதற்கு அவர், அயனாவரம் என்றதும் ``இவ்வளவு தூரத்திலிருந்து வருவதால் உங்களின் செல்போன் நம்பரை கொடுத்துவிட்டுச் செல்லுங்கள், நல்ல மீன் வந்தால் போனில் விவரம் சொல்கிறேன்" என்று கூறியிருக்கிறார். அதனால், சாந்தியும் செல்போன் நம்பரை மீன் வியாபாரி கோட்டை முனியசாமியிடம் கொடுத்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து சாந்தி, மீன்களை வாங்கிக்கொண்டு மார்க்கெட்டைவிட்டு வெளியில் வந்திருக்கிறார். அப்போது, மீன் வியாபாரி கோட்டை முனியசாமி போனில் சாந்தியைத் தொடர்புகொண்டு, ``நீங்கள் வாங்கிய சில மீன்களைக் கடையில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டீர்கள்" என்று கூறியிருக்கிறார். அதனால் சாந்தி மார்க்கெட்டுக்குள் சென்று மீன்கள் குறித்து வியாபாரி கோட்டை முனியசாமியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு, அவர் கடையில் உள்ள மீன்களை காண்பித்து ``இதில் எந்த மீன் பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்" என்று கூறியதோடு தகாத முறையில் பேசியிருக்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சாந்தி, அங்கிருந்து வெளியேறி, கணவர் விஜயகுமாரிடம் விவரத்தைக் கூறியிருக்கிறார். அதனால் விஜயகுமாரும் சாந்தியும் மார்க்கெட்டுக்குள் மீண்டும் சென்று மீன் வியாபாரி கோட்டை முனியசாமியிடம் `ஏன் இவ்வாறு தகாத வார்த்தைகளால் பேசினாய்?’ என்று கேட்டுள்ளனர்.

காளிதாஸ்
காளிதாஸ்

அதனால் முனியசாமிக்கும் விஜயகுமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது முனியசாமிக்கு ஆதரவாக மூன்று பேர் சேர்ந்து விஜயகுமாரைத் தாக்கியுள்ளனர். அதைத் தடுக்கச் சென்ற சாந்தியையும் அவர்கள் தாக்கியுள்ளனர். பிளாஸ்டிக் பெட்டி, கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து விஜயகுமார், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து மீன் வியாபாரி கோட்டை முனியசாமி, கொளத்தூரைச் சேர்ந்த கண்ணன், விஜய் சங்கர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ் ஆகியோரைக் கைதுசெய்தனர். விசாரணைக்குப் பிறகு நான்கு பேரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.