Published:Updated:

விமானத்தில் வேலை... போலி பணி நியமன ஆணை - புதுக்கோட்டையில் ரூ.18.4 லட்சம் சுருட்டிய கும்பல் கைது!

ஸ்ரீகாந்த், முகமத்லாபீர்,மன்சூர்

விராச்சிலையிலேயே தங்கி இளம்பெண்ணைப் போன்ற படித்து முடித்துவிட்டு வேலை வாய்ப்பில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கும் வலை விரித்துள்ளார். இவரின் வலையில், பட்டதாரி இளம்பெண் உட்பட 15 பேர் சிக்கி, பணத்தை இழந்திருக்கின்றனர்.

விமானத்தில் வேலை... போலி பணி நியமன ஆணை - புதுக்கோட்டையில் ரூ.18.4 லட்சம் சுருட்டிய கும்பல் கைது!

விராச்சிலையிலேயே தங்கி இளம்பெண்ணைப் போன்ற படித்து முடித்துவிட்டு வேலை வாய்ப்பில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கும் வலை விரித்துள்ளார். இவரின் வலையில், பட்டதாரி இளம்பெண் உட்பட 15 பேர் சிக்கி, பணத்தை இழந்திருக்கின்றனர்.

Published:Updated:
ஸ்ரீகாந்த், முகமத்லாபீர்,மன்சூர்

புதுக்கோட்டை மாவட்டம், விராச்சிலையைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்( 25). டிப்ளோமா மெக்கானிக் படித்து முடித்திருக்கும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னிடம் விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சிலர் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பணத்தைப் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஸ்ரீகாந்த், முகமத்லாபீர், மன்சூர் ஆகிய மூன்று பேரைக் கைதுசெய்தனர்.

இது பற்றி போலீஸார் கூறும்போது, ``புதுக்கோட்டை மாவட்டம், விராச்சிலையைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலை தேடிச் சென்றுள்ளார். அங்கு வேலை கிடைக்காத நிலையில், சொந்த ஊருக்குத் திரும்ப ரயில் நிலையத்துக்கு வந்து காத்திருந்திருக்கிறார். அப்போது, அங்கு வந்த நெய்வேலியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர், அந்தப் பெண்மணியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார்.

ஸ்ரீகாந்த், முகமத்லாபீர்,மன்சூர்
ஸ்ரீகாந்த், முகமத்லாபீர்,மன்சூர்

அந்தப் பெண்ணுக்கு அங்கு வேலை கிடைக்காததை அறிந்துகொண்டவர், `இந்த வேலை கிடைக்கவில்லையென்றால் என்ன... நான் விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருகிறேன்' என்று கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் தொடர்பு எண், விவரங்களைப் பெற்றுக்கொண்டவர், அடுத்த சில நாள்களில் போனில் பேசியதுடன், விராச்சிலைக்கும் கிளம்பிச் சென்றுள்ளார். இதையடுத்து, அவர்களின் உறவினர்களை கேன்வாஸ் செய்து நம்ப வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில், விராச்சிலையிலேயே தங்கி இளம்பெண்ணைப் போன்ற படித்து முடித்துவிட்டு வேலை வாய்ப்பில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கும் வலை விரித்துள்ளார். இவரின் வலையில், பட்டதாரி இளம்பெண் உட்பட 15 பேர் சிக்கி பணத்தை இழந்திருக்கின்றனர்.

அவர்களிடமிருந்து ரூ.18,40,000 பணத்தைப் பெற்றுள்ளனர். தொடர்ந்து டெல்லி விமான நிலையம் அழைத்துச் சென்று, அங்கு ஸ்ரீகாந்தால் செட்-அப் செய்யப்பட்ட நண்பர்களை வைத்துப் பேசி, போலியான பணி நியமன ஆணையையும் கொடுத்துள்ளனர். அந்த பணி நியமன ஆணையை வைத்து வேலைக்குச் செல்ல முயன்றபோதுதான் அவர்கள் ஏமாந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்துவருகிறோம்" என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism