Published:Updated:

வேகமெடுக்கும் விஜயலட்சுமி வழக்கு; ஹரி நாடார் கைது - சீமானுக்குச் சிக்கல்?!

விஜயலட்சுமி வழக்கு!

நடிகை விஜயலட்சுமியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ஹரி நாடார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆட்சியின்போது கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த வழக்கை போலீஸார் தூசுதட்டத் தொடங்கியுள்ளனர்.

வேகமெடுக்கும் விஜயலட்சுமி வழக்கு; ஹரி நாடார் கைது - சீமானுக்குச் சிக்கல்?!

நடிகை விஜயலட்சுமியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ஹரி நாடார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆட்சியின்போது கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த வழக்கை போலீஸார் தூசுதட்டத் தொடங்கியுள்ளனர்.

Published:Updated:
விஜயலட்சுமி வழக்கு!

நடமாடும் நகைக்கடையாக வலம்வருபவர், ஹரிகோபால கிருஷ்ணன் என்ற ஹரி நாடார். நெல்லை மாவட்டம், இலந்தைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இவர், சிறு வயதிலேயே மும்பைக்குச் சென்று பின்னர் அங்கிருந்து சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டார்.

ராக்கெட் ராஜாவின் `பனங்காட்டுப் படை’ கட்சியில் முக்கியப் பொறுப்பு வகித்த அவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப்பெற்று மூன்றாம் இடம்பிடித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வட்டித் தொழில் செய்துவந்த ஹரி நாடார் பின்னர் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். புதிய திரைப்படங்களுக்கு பூஜை போட்டிருந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த வெங்கட்ராமன் சாஸ்திரி என்பவர் உள்ளிட்ட சிலருக்குக் கடன் வாங்கிக் கொடுப்பதாக 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.

நடிகை விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமி

இது தொடர்பான வழக்கில் பெங்களூரு போலீஸார் கடந்த ஆண்டு அவரைக் கைதுசெய்து பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, சீமான் மீது குற்றம்சாட்டிவந்த நடிகை விஜயலட்சுமி, கடந்த 2020-ம் ஆண்டு சென்னையில் அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை சென்னை திருவான்மியூர் போலீஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகை விஜயலட்சுமி ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரில், ``உடல்நிலை சரியில்லாத நிலையிலும், சிலரின் தூண்டுதலின்பேரில் என்னை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள். சீமானுக்காக என்னை ஹரி நாடார் மிரட்டுகிறார். அதனால் சீமான், ஹரி நாடார், சதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் புகார் அளித்திருந்தார்.

ஹரி நாடார்
ஹரி நாடார்

இது தொடர்பாக வீடியோவும் வெளியிட்டிருந்தார். கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது இந்தப் புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் தொடர்ந்து அவர் தன் புகார் குறித்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதால் பழைய வழக்கை இப்போது போலீஸார் தூசுதட்டி எடுத்துள்ளனர்.

சீமான்மீது வழக்கு பாயுமா?

ஹரி நாடார் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக 506 (1), 506 ஆகிய குற்றப் பிரிவுகளிலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புப் பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஹரி நாடாரைக் கைதுசெய்வதற்காக நீதிமன்றத்தின் அனுமதியுடன் பெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு காவல்துறையினர் கடிதம் அனுப்பினார்கள்.

கைது
கைது

திருவான்மியூர் காவல்துறையினர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று ஹரி நாடாரைக் கைதுசெய்தனர். பின்னர் சிறைத்துறை நடைமுறைகளுக்குப் பின்னர் அவரை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். அவரை மூன்று நாள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

நடிகை விஜயலட்சுமி கொடுத்த வழக்கில், சீமானின் தூண்டுதலில் ஹரி நாடார், சதா ஆகியோர் தன்னை மிரட்டியதாகவும் அதனால் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். தற்போது ஹரி நாடார் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சீமான்மீதும் கைது நடவடிக்கை பாயும் என்று பரவலாகப் பேசப்பட்டுவருகிறது.

சீமான்
சீமான்

ஹரி நாடாரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்த பின்னர், சீமானிடமும் விசாரணை நடத்த திருவான்மியூர் போலீஸார் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அத்துடன் ஹரி நாடார் அளிக்கும் வாக்குமூலத்தில் சீமான் பெயரைக் குறிப்பிட்டாலும் சீமானுக்குச் சிக்கல் ஏற்படக் கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism