Published:Updated:

பெரியார் பெயரில் உணவகம்; அடித்து நொறுக்கி சூறையாடிய இந்து முன்னணியினர் கைது! - என்ன நடந்தது?

தந்தை பெரியார் உணவகம்

கோவை காரமடை அருகே பெரியார் பெயரில் அமைக்கப்பட்ட உணவகம்மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர் கைதுசெய்யப்பட்டனர்.

பெரியார் பெயரில் உணவகம்; அடித்து நொறுக்கி சூறையாடிய இந்து முன்னணியினர் கைது! - என்ன நடந்தது?

கோவை காரமடை அருகே பெரியார் பெயரில் அமைக்கப்பட்ட உணவகம்மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர் கைதுசெய்யப்பட்டனர்.

Published:Updated:
தந்தை பெரியார் உணவகம்

கோவை காரமடை அருகே உள்ள கண்ணார்பாளையம் பகுதியில் பிரபாகரன் என்பவர் ஓர் உணவகத்தை கட்டியிருந்தார். அதற்கு `தந்தை பெரியார் உணவகம்' எனப் பெயரிட்டு, பெரியார் படத்துடன் கடை முன் பெயர் பலகை வைத்திருந்தார்.

தந்தை பெரியார் உணவகம்
தந்தை பெரியார் உணவகம்

தொடர்ந்து பிரபாகரன் அந்த உணவகத்தை இன்று திறந்து வைப்பதாக இருந்தது. அதற்கான பணிகளில் தன் ஊழியர்களுடன் பிரபாகரன் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், பெரியார் பெயரில் உணவகம் திறப்பது தொடர்பாக பிரபாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி, அந்தக் கும்பல் கடையை அடித்து நொறுக்கி சூறையாடியிருக்கிறது.

தந்தை பெரியார் உணவகம் தாக்குதல்
தந்தை பெரியார் உணவகம் தாக்குதல்

மேலும் பிரபாகரன் மற்றும் அவரது ஊழியர்களை அவர்கள் தகாத வார்த்தைகளில் திட்டியதாகத் தெரிகிறது. இந்தத் தாக்குதலில் அந்தக் கடையில் வேலை செய்யும் அருண் என்பவர் காயமடைந்தார்.

இது குறித்து பிரபாகரன் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ரவிபாரதி, சரவணக்குமார், சுனில், விஜயகுமார், பிரபு, பிரபாகரன் ஆகிய ஆறு பேரைக் கைதுசெய்திருக்கின்றனர்.

கைது
கைது

இதனிடையே இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பெரியாரிய அமைப்புகள், போராட்டம் நடத்தவும் அழைப்பு விடுத்திருகின்றன.