Published:Updated:

சென்னை: மணிக்கணக்கில் போனில் பேசிய மனைவி; ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்!

கொலைசெய்யப்பட்ட பிரியங்காவுடன் அவரின் கணவர்

ஒடிசாவைச் சேர்ந்த பிரியங்கா, சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார். அவரைக் கொலைசெய்த குற்றத்துக்காக பிரியங்காவின் கணவரும், வங்கி மேலாளருமான ஆசிஃப் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை: மணிக்கணக்கில் போனில் பேசிய மனைவி; ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்!

ஒடிசாவைச் சேர்ந்த பிரியங்கா, சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார். அவரைக் கொலைசெய்த குற்றத்துக்காக பிரியங்காவின் கணவரும், வங்கி மேலாளருமான ஆசிஃப் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
கொலைசெய்யப்பட்ட பிரியங்காவுடன் அவரின் கணவர்

சென்னை மஸ்கான் சாவடி பகுதியில் வசித்து வந்தவர் ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரியங்கா பத்ரா (39). இவர் ஐ.டி. நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார். இவரின் கணவர் ஆசிஃப் இக்பால். இவர் தனியார் வங்கியில் மேலாளராக வேலைப்பார்த்து வருகிறார். இந்த நிலையில், பிரியங்கா பத்ராவுக்கும் ஆசிஃப் இக்பாலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 9.11.2022-ம் தேதி பிரியங்கா பத்ரா, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக வீட்டின் உரிமையாளர் முகமது ஃபரூக் , முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து பிரியங்கா பத்ராவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆசிஃப்
ஆசிஃப்

தொடர்ந்து பிரியங்கா கொலை குறித்து விசாரித்தபோது அவரின் கணவர் ஆசிஃப் இக்பால் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது மனைவியைக் கொலைசெய்தததை ஆசிஃப் இக்பால் ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து ஒரு செல்போன், டேப்லட், கத்தி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து, ஆசிஃப் இக்பாலைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``பிரியங்காவும் ஆசிஃப் இக்பாலும் ஓடிசாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தவர்கள். இவர்களின் காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்புக் கிளம்பியதால் இருவரும் ஒடிசாவைவிட்டு வெளியேறி வேலைத் தேடி சென்னை வந்தனர்.

கைது
கைது

இந்தத் தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. அதனால் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கைநிறைய சம்பளம் வாங்கியபோதிலும் வீட்டில் நிம்மதியில்லை. இந்தச் சமயத்தில்தான் மனைவியின் நடவடிக்கையில் ஆசீஃப்புக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் பிரியங்கா, மணிக்கணக்கில் செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அதை ஆசிஃப் கண்டித்தும் கேட்கவில்லை. அந்த ஆத்திரத்தில்தான் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கிறார் ஆசிஃப். பிரியங்காவின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.