Published:Updated:

மனைவியைக் கொன்ற கணவன்; தப்பிக்க மாஸ்டர் பிளான்... போலீஸில் சிக்கியது எப்படி?

க்ரைம் - கொலை

சென்னையில் மனைவியைக் கழுத்தை நெரித்துக்கொலைசெய்த கணவரை போலீஸார் கைதுசெய்தனர்.

மனைவியைக் கொன்ற கணவன்; தப்பிக்க மாஸ்டர் பிளான்... போலீஸில் சிக்கியது எப்படி?

சென்னையில் மனைவியைக் கழுத்தை நெரித்துக்கொலைசெய்த கணவரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
க்ரைம் - கொலை

சென்னை, திருவொற்றியூர், பூங்காவனபுரத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர், தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். இவரின் மனைவி மைதிலி. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். இந்த நிலையில் மைதிலியைக் காணவில்லை என்று கடந்த 6-ம் தேதி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் மணிமாறன் புகார் மனு ஒன்றினை அளித்தார். அதில், ``என்னுடைய மனைவி மைதிலி, திருவொற்றியூர் மாநகராட்சி அலுவலகத்தில் கிளினிங் வேலை செய்து வந்தார். கடந்த 3.8.2022-ம் தேதி மைதிலி, உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்குச் செல்ல எர்ணாவூர் சுனாமி குடியிருப்புக்குச் சென்றார்.

மணிமாறன்
மணிமாறன்

பின்னர் மைதிலி திருவொற்றியூருக்கு வர அவருடன் வேலை செய்யும் ஜெயசங்கர் என்பவரின் டூவிலரில் லிஃப்ட் கேட்டு வந்திருக்கிறார். திருவொற்றியூர் பகுதியிலுள்ள எல்லையம்மன் கோயிலில் மைதிலி, ஜெயசங்கரின் பைக்கிலிருந்து கீழே இறங்கினார். அப்போது அவரை அழைத்து வர நான் அங்கு காத்திருந்தேன். ஜெயசங்கருடன் பைக்கில் வந்தது தொடர்பாக, `நீ ஏன் அவருடன் வந்தாய்?' என்று மைதிலியிடம் நான் கேட்டேன். அதனால் மைதிலி என்மீது வருத்தப்பட்டாள்.

பின்னர் ஜெயசங்கரிடம் விவரம் கேட்போம் என்று என்னை அழைத்துக்கொண்டு அவரின் வீட்டுக்கு மைதிலி சென்றார். ஜெயசங்கரின் வீட்டின் அருகே சென்றபோது மைதிலி விவரம் கேட்க வேண்டாம் என்று கூறிவிட்டார். அதனால் என் மனைவியை அங்கேயே விட்டுவிட்டு உறவினர் வீட்டுக்கு நான் சென்றுவிட்டேன். பின்னர் அன்றைய தினம் இரவு 10:15 மணியளவில் வீட்டுக்குச் சென்றபோது என் மனைவி மைதிலி அங்கு இல்லை. அவரைப் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே என் மனைவியைக் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் சுந்தரராசு வழக்கு பதிவுசெய்து விசாரித்தார்.

மைதிலியின் சடலம்
மைதிலியின் சடலம்

இந்த நிலையில், திருவொற்றியூரிலிருந்து மணலி செல்லும் வழியில் உள்ள பாலத்துக்குக் கீழ் பகுதியில் கிடந்த துணி மூட்டைக்குள்ளிலிருந்து தூர்நாற்றம் வீசுவதாக மணலி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற மணலி போலீஸார், துணி மூட்டைக்குள் பார்த்தபோது இளம்பெண்ணின் சடலம் இருப்பது தெரியவந்தது. அவர் யாரென்று விசாரித்தபோது காணாமல் போன மைதிலி எனத் தெரியவந்தது. இதையடுத்து மைதிலியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பிரேத பரிசோதனையில் மைதிலி கழுத்தை நெரித்துக் கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது. அதனால் அவரைக் கொலைசெய்தது யாரென்று போலீஸார் விசாரித்தனர். மைதிலியின் கணவர் மணிமாறனிடம் விசாரித்தபோது, ஜெயசங்கர்மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தார். அதனால் போலீஸார் ஜெயசங்கரிடம் விசாரித்தனர். விசாரணையில் மைதிலி கொலைக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பு இல்லை எனத் தெரியவந்தது. அதனால் போலீஸார் மைதிலி கொலைசெய்யப்பட்ட பகுதியில் செல்போன் சிக்னலை ஆய்வுசெய்தனர். அதில் மணிமாறனின் செல்போன் சிக்னல் அங்கு காட்டியது.

மணலி
மணலி

இதையடுத்து மணிமாறனிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், சம்பவத்தன்று மைதிலியும் மணிமாறனும் பாலத்துக்கு கீழ் பகுதியில் துணி மூட்டை அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த மணிமாறன், துணியை எடுத்து மைதிலியின் கழுத்தை நெரித்திருக்கிறார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவியின் ஆண் நண்பரான ஜெயசங்கரை இந்த வழக்கில் சிக்கவைக்க, மைதிலியைக் காணவில்லை என்று போலீஸில் புகாரளித்திருக்கிறார். ஆனால் போலீஸ் விசாரணையில் மணிமாறன் மாட்டிக்கொண்டார். விசாரணைக்குப் பிறகு மணிமாறனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.