Published:Updated:

பயிற்சிக்குச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை; கராத்தே மாஸ்டர் போக்சோவில் சிக்கியது எப்படி?

போக்சோ வழக்கில் கைதான உதய கருணாநிதி

கராத்தே கற்றுக்கொள்ள சென்ற சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாஸ்டர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

பயிற்சிக்குச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை; கராத்தே மாஸ்டர் போக்சோவில் சிக்கியது எப்படி?

கராத்தே கற்றுக்கொள்ள சென்ற சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாஸ்டர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
போக்சோ வழக்கில் கைதான உதய கருணாநிதி

சென்னை, திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியைக் காணவில்லை என கடந்த 1-ம் தேதி புகாரளிக்கப்பட்டது. அப்போது கராத்தே மாஸ்டர் உதய கருணாநிதி என்பவர் சிறுமியின் பெற்றோருடன் வந்தார். இதையடுத்து காணாமல்போன சிறுமி, வீடு திரும்பினார். அப்போது சிறுமியிடம் அவரின் பெற்றோர், எங்குச் சென்றாய் என்று விசாரித்தனர். விசாரணையில் சிறுமி கூறிய ஒவ்வொரு தகவலையும் கேட்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து சிறுமியை அழைத்துக் கொண்டு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குப் பெற்றோர் சென்றனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

சிறுமியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி, ``என்னுடைய வீட்டின் அருகே வசிக்கும் கோபி என்பவருடன் புத்தாண்டைக் கொண்டாட மெரினா கடற்கரைக்குச் சென்றேன். பின்னர் தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கினோம்" எனக் கூறியிருக்கிறார். `ஏன் கோபியுடன் சென்றாய்?' என போலீஸார் கேட்டதற்கு, கராத்தே மாஸ்டரின் பாலியல் தொல்லைக் குறித்து சிறுமி கண்ணீர்மல்க தெரிவித்திருக்கிறார். ``கராத்தே பயிற்சி என்ற பெயரில் மாஸ்டர் உதய கருணாநிதி எனக்கு நீண்டகாலமாக பாலியல் தொல்லைக் கொடுத்து வருகிறார்.

அதை யாரிடம் சொல்லக்கூடாது எனப் பணமும் கொடுத்தார். இந்தத் தகவலை கோபியிடம் தெரிவித்தேன். அப்போது கோபி எனக்கு ஆறுதல் கூறினான். கராத்தே மாஸ்டரிடமிருந்து தப்பிக்கத்தான் கோபியுடன் பழனி வந்தேன்" என்று சிறுமி கூறினார். அதைக்கேட்டு போலீஸாரும் சிறுமியின் பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர்.

போக்சோ வழக்கில்  கைதான உதய கருணாநிதி
போக்சோ வழக்கில் கைதான உதய கருணாநிதி

உடனடியாக கராத்தே மாஸ்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து கராத்தே மாஸ்டர் உதய கருணாநிதியிடம் விசாரித்தனர். அப்போது அவர், ``எனக்கு இன்னமும் திருமணமாகவில்லை. பயிற்சிக்கு வந்த நாள் முதல் சிறுமியைக் காதலித்து வருகிறேன். அதனால் அவருக்கு 18 வயதானதும் திருமணம் செய்துகொள்வேன்" என்று தெரிவித்தார். இதையடுத்து சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கராத்தே மாஸ்டர் உதய கருணாநிதியை போலீஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.