Published:Updated:

முன்ஜாமீன் கேட்ட மதன்; கடுகடுத்த நீதிபதி! - விசாரணை வளையத்தில் மதனின் குடும்பம்!

மதன்

யூடியூபில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் நேரலையில் சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாகப் பேசிய விவகாரத்தில் தலைமறைவாகியுள்ள யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

முன்ஜாமீன் கேட்ட மதன்; கடுகடுத்த நீதிபதி! - விசாரணை வளையத்தில் மதனின் குடும்பம்!

யூடியூபில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் நேரலையில் சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாகப் பேசிய விவகாரத்தில் தலைமறைவாகியுள்ள யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

Published:Updated:
மதன்

இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டான `பப்ஜி’ தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், VPN தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த விளையாட்டை ஏராளமானோர் விளையாடிவருகின்றனர். அந்தவகையில், மதன் (29) என்பவர், தடைசெய்யப்பட்டுள்ள பப்ஜி விளையாட்டை யூடியூபில் நேரலை செய்து வர்ணனை, நுணுக்கங்கள் என்ற பெயரில் சிறுவர், சிறுமிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டிவந்தார். பப்ஜி எப்படிச் சிறப்பாக விளையாடுவது என்பது குறித்து நேரலை செய்யும் மதனின் விளையாட்டுத் திறனுக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதைப் பயன்படுத்தி மதன் `லைவ் கேமிங்' என்ற பெயரில் பெண்கள், சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாகப் பேசுவது, பணப் பறிப்பில் ஈடுபடுவது எனப் பல்வேறு அட்டூழியங்களைச் செய்துவந்தார்.

இந்தநிலையில், ஆன்லைன் விளையாட்டின்போது பெண்களிடம் ஆபாசமாகப் பேசியதாக மதன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் இதுவரையில் 159 புகார்கள் வந்ததுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில், குற்றப்பிரிவு போலீஸார் யூடியூபர் மதன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீஸார் மதனைப் பிடிக்கத் தேடுதல் வேட்டையில் களமிறங்கினர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் மதன் ஆபாச வார்த்தைகளைப் பேசி நடத்திவந்த 'டாக்ஸிக் மதன் 18+' என்ற யூடியூப் சேனலின் நிர்வாகியாக அவரது மனைவியே செயல்பட்டுவந்ததைக் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து நேரலையில் பேசிவந்த பெண்ணின் குரலைச் சோதனை செய்த போலீஸார், அது மதனின் மனைவி கிருத்திகாவின் குரல்தான் என்பதை உறுதிசெய்தனர். இதற்கிடையில், மதனுக்கு முன்ஜாமீன் வழங்குமாறு அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், ''மதன் பேசியதைக் காதுகொடுத்துக் கேட்க முடியவில்லை. குழந்தைகளைக் கெடுக்கும் வகையிலும், பெண்களைக் கேவலப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார். மதன் ஆடியோவின் ஆரம்பமே கேட்க முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. மதனின் பேச்சை நீங்கள் காதுகொடுத்துக் கேட்டிருக்கிறீர்களா?'' என மதன் சார்பாக ஆஜரான வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மதனின் பேச்சைக் கேட்டுவிட்டு நாளை (18.06.2021) வருமாறு அறிவுறுத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மறுபுறம், சேலத்தில் மதனின் வீட்டைக் கண்டுபிடித்த போலீஸார் அங்கு சென்றனர். ஆனால், போலீஸார் தன்னை நெருங்குவதை அறிந்த மதன் அங்கிருந்து தலைமறைவாகி பெங்களூரு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று சென்னையை அடுத்த வேங்கைவாசல் பகுதியில் வசித்துவந்த மதனின் மனைவி கிருத்திகாவை (25) அவரின் எட்டு மாத கைக்குழந்தையுடன் குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்தனர். விசாரணையை முடித்து போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதில் நீதிபதிகள், மதனின் மனைவி கிருத்திகாவை வரும் 30-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டனர். அதேபோல், மதனின் தந்தையையும் போலீஸார் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.

யூடியூபர் 'டாக்ஸிக்' மதன்
யூடியூபர் 'டாக்ஸிக்' மதன்

மனைவி கிருத்திகா, தந்தை ஆகியோர் போலீஸாரின் பிடியில் சிக்கியிருப்பதால் டாக்ஸிக் மதன் விரைவில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism