Published:Updated:

ஃபைனான்ஸியர் திருடிக் கொடுத்த 550 சவரன் தங்க நகைகள் எங்கே?! - மாடல் சுவாதி சொன்ன மழுப்பல் பதில்

மாடல் சுவாதி

திருட்டு வழக்கில் ஃபைனான்ஸியர் ஒருவரும், மாடல் அழகியும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடிய 550 சவரன் தங்க நகைகள் எங்கே என்று அந்தப் பெண்ணிடம் போலீஸார் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலைக் கேட்டு அதிகாரிகள் விழிபிதுங்கியுள்ளனர்.

ஃபைனான்ஸியர் திருடிக் கொடுத்த 550 சவரன் தங்க நகைகள் எங்கே?! - மாடல் சுவாதி சொன்ன மழுப்பல் பதில்

திருட்டு வழக்கில் ஃபைனான்ஸியர் ஒருவரும், மாடல் அழகியும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடிய 550 சவரன் தங்க நகைகள் எங்கே என்று அந்தப் பெண்ணிடம் போலீஸார் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலைக் கேட்டு அதிகாரிகள் விழிபிதுங்கியுள்ளனர்.

Published:Updated:
மாடல் சுவாதி

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், கடந்த 8-ம் தேதி பூந்தமல்லி காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``என்னுடைய அண்ணன் சேகர் (47) என் மனைவியின் 300 சவரன் தங்க நகைகளையும் என்னுடைய அம்மாவின் 200 சவரன் தங்க நகைகளையும் 100 கிராம் எடையுள்ள ஏழு தங்கக்கட்டிகளையும், லட்சக்கணக்கான பணத்தையும் திருடி, சுவாதி என்ற பெண்ணிடம் கொடுத்திருக்கிறார். அதனால் நகைகளை மீட்டுக் கொடுப்பதோடு, நகைகளைத் திருடிய சேகர் மீதும், சுவாதி மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவுசெய்து சேகரையும் சுவாதியையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

சுவாதி
சுவாதி

ராஜேஷ் கொடுத்த புகாரில் சுமார் 550 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், போலீஸார் சுவாதியிடம் விசாரித்தபோது சேகரின் குடும்பத்தினர் கத்தியைக் காட்டி மிரட்டி என்னிடமிருந்து சேகர் கொடுத்த தங்க நகைகளைப் பறித்துக்கொண்டனர் என்று கூறியிருக்கிறார். மேலும் சேகர் வாங்கிக் கொடுத்த சொகுசு கார்களில் ஒன்றை மட்டும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மற்ற கார்கள் எங்கே என்று சுவாதியிடம் கேட்டதற்கு, என்னுடைய பாய் ஃப்ரெண்ட்ஸுகளுக்கு கிஃப்ட்டாகக் கொடுத்துவிட்டேன் என்று பதிலளித்திருக்கிறார். அதனால் தங்க நகைகளையும் கார்களையும் பறிமுதல் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வழக்கை விசாரித்த போலீஸாரிடம் கேட்டதற்கு, ``கைதான சேகரும், சுவாதியும் திருமணமானவர்கள். இந்த நிலையில்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் மூலம் சுவாதி, ஃபைனான்ஸியர் சேகருக்கு அறிமுகமாகியிருக்கிறார். அதன் பிறகு இருவரும் அடிக்கடி நட்சத்திர ஹோட்டல்களில் சந்தித்துப் பழகிவந்தனர். அப்போது சுவாதிக்கு நகைகள், பணத்தை அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார். சுவாதிக்கு நகைகள், பணத்தைக் கொடுக்க சொந்த வீட்டிலேயே சேகர் திருடியிருக்கிறார்.

சேகர்
சேகர்

சேகர், சுவாதி ஆகியோரின் நட்பு அவர்களின் குடும்பத்தினருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. நகைகள், பணம் அதிக அளவில் காணாமல்போன பிறகே சேகரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். அதற்கு முன்பு சேகரின் குடும்பத்தினர் சுவாதியைத் தொடர்புகொண்டு சேகர் கொடுத்த பணம், தங்கத்தைத் திரும்பத் தங்களிடம் கொடுத்துவிடும்படி மிரட்டியிருக்கின்றர். மேலும் சுவாதியை அவர்கள் வலுகட்டாயமாகக் கடத்தியுள்ளனர். தற்போது சுவாதி சிறையில் உள்ள நிலையில் அவரின் குடும்பத்தினர், சுவாதியைக் கடத்திக் கொடுமைப்படுத்தியதாக சேகரின் குடும்பத்தினர்மீது புகாரளித்துள்ளனர். அதனால் சேகரின் குடும்பத்தினர் மீது கடத்தல் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது" என்றனர்.

இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``ஃபைனான்ஸியர் சேகரும் சுவாதியும் ஊட்டி, கோவா எனப் பல இடங்களுக்கு இன்பச் சுற்றுலாவுக்குச் சென்றுள்ளனர். தற்போதுகூட தாய்லாந்துக்குச் செல்ல இருவரும் டூரிஸ்ட் விசா எடுத்துவைத்துள்ளனர். இந்த வழக்கில் சிக்கவில்லையென்றால் இருவரும் தாய்லாந்து சென்றிருப்பார்கள். சுவாதியின் பின்னணி குறித்து விசாரித்தபோது அவருக்கு ஆண் நண்பர்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது. அதில் ஒரு நண்பராகத்தான் சேகர் இருந்திருக்கிறார்.

சுவாதி
சுவாதி

சேகரைச் சந்திக்கும்போதெல்லாம் பணம், தங்க நகைகளை சுவாதி வாங்கியிருக்கிறார். அதனால்தான் மற்றவர்களைவிட சேகருடன் சுவாதி நெருங்கிப் பழகிவந்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் 20 வயதுக்கு மேல் வித்தியாசம் இருந்தாலும் சேகரிடமிருந்து போன் அழைப்பு வந்துவிட்டால் சுவாதி உடனடியாக அவரைச் சந்திக்கச் சென்றுவிடுவார். ஒரு தடவை சுவாதியும் சேகரும் கோவாவுக்குச் சென்றபோது அங்கு சுவாதியின் ஆண் நண்பர்கள் சிலர் வந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்த சேகர் கோபப்பட்டிருக்கிறார். இதையடுத்து அனைவரையும் சுவாதி சமாளித்து, அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

சேகரிடம் வாங்கிய தங்க நகைகள் குறித்து சுவாதியிடம் விசாரித்தபோது, `நான் தினமும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு நண்பர்களோடு செல்வேன். அதனால் நகைகளை விற்று செலவழித்துவிட்டேன்’ என்று கூலாகக் கூறியிருக்கிறார். அதனால் சுவாதி சொல்வது உண்மையா என்பதைக் கண்டறிய அவரின் நண்பர்கள் பட்டியலைச் சேகரித்திருக்கிறோம். மேலும் சில நகைகளை சுவாதி விற்றதாகக் கூறியிருக்கிறார். அவர் எங்கு, யாரிடம் நகைகளை விற்றார் என்றும் விசாரித்துவருகிறோம். சுவாதிக்குப் பல வகையில் அவரின் நெருங்கிய தோழி ஒருவர், இன்னும் சில பாய் ஃப்ரெண்ட்ஸுகள் உதவி செய்திருக்கின்றனர். அவர்களும் எங்களின் சந்தேக வளையத்தில் இருக்கிறார்கள். சுவாதிக்கும் அவரின் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்வதாகத் தகவல் கிடைத்தது. அதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடந்துவருகிறது" என்றார்.